கட்டிட ஒப்பந்தம் என்பது, கட்டிடத்தைக் கட்டுவிப்பவருக்கும், ஒரு குறிப்பிட்ட அளவான கட்டிட வேலையை, குறிக்கப்பட்ட சீர்தரத்துக்கு அமைய, குறிப்பிட்ட தொகையொன்றுக்குக் கட்ட ஒப்புக்கொள்ளும் தனிப்பட்டவர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். கட்டிட ஒப்பந்தங்கள் பலவகையாக உள்ளன. கட்டிட ஒப்பந்தங்களுக்கிடையே அவற்றின் தன்மை மற்றும் அளவு என்பன தொடர்பில் பெருமளவுக்கு வேறுபாடுகள் காணப்பட்டாலும், எல்லா ஒப்பந்தங்களிலும் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன.[1][2][3]

  • ஒவ்வொரு திறத்தாரும், மற்றவர்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்வதற்கும் ஒருவரோடொருவர் ஒத்துழைத்து நடந்து கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருத்தல்;
  • இழப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளல்;
  • ஒவ்வொருவருடையதும் பங்கு, கடமை என்பவற்றைத் தெளிவாக வரையறுத்தல்;
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவு முறைகள்;
  • வேலையைத் தொடங்குவதற்கும் அதனை முடிப்பதற்குமான ஒத்துக்கொள்ளப்பட்ட கால அளவு இருத்தல்;
  • திறத்தாரிடையே பிரச்சினைகள் தோன்றும்போது அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டிருத்தல்;

கட்டிட ஒப்பந்தத்துக்கான பலவித ஒப்பந்த வடிவங்கள் உள்ளன. அவற்றுள் ஜேசிடி (JCT) எனப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் நியாயசபையின் (Joint Contracts Tribunal.)ஒப்பந்த வடிவம், FIDIC ஒப்பந்த வடிவம் என்பன அனைத்துலக அளவில் கைக்கொள்ளப்படுபவை.

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.