கசுனி மாகாணம் (Ghazni Province) ஆப்கானித்தான் நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஆப்கானித்தானின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கசுனி மாகாணம் 19 மாவட்டங்களைக் கொண்டது. கஜினியின் மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். [1] காபூல் - கந்தகார் நெடுஞ்சாலையில் அமைந்த கசுனி நகரம், கஜினி மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வணிக மையம் ஆகும்.
கசுனி மாகாணம்
غزنى | |
---|---|
ஆப்கானித்தான் மாகாணம் | |
ஆப்கானித்தானில் கசுனியின் அமைவிடம் | |
நாடு | ஆப்கானித்தான் |
தலைநகரம் | கசுனி நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22,915 km2 (8,848 sq mi) |
மக்கள்தொகை (2013)[1] | |
• மொத்தம் | 11,68,800 |
• அடர்த்தி | 51/km2 (130/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-GHA |
மொழிகள் | பஷ்தூன் மொழி தாரி மொழி |
மக்கள் தொகையியல்
2013-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கசுனி மாகாணத்தின் மக்கள் தொகை 11,68,800 ஆக உள்ளது.[1] மக்கள் தொகையில் பஷ்தூன் பழங்குடி மக்கள் (48.9% ), ஹசாரா பழங்குடிகள் (45.9%), தாஜிக் மக்கள் 4.7%, இந்துக்கள் 1%க்கும் கீழ் உள்ளனர்.
வேளாண்மை, கால்நடை வளர்த்தல் ஆகியவை கசுனி மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் ஆகும்.
மாவட்டங்கள்
மாவட்டம் | தலைமையிடம் | மக்கள் தொகை (2013)[1] | பரப்பளவு |
---|---|---|---|
அப் பாண்ட் மாவட்டம் | ஹாஜி கேல் | 26,700 | |
அஜிரிஸ்தான் மாவட்டம் | சங்கர் | 28,000 | |
அந்தர் மாவட்டம் | மிரே | 121,300 | |
திஹ் யாக் மாவட்டம் | ராமாக் | 47,500 | |
ஜெலன் மாவட்டம் | ஜந்தா | 56,200 | |
கஜினி மாவட்டம் | கஜினி | 157,600 | |
கிரோ மாவட்டம் | பனா | 35,500 | |
ஜெகது மாவட்டம் | குல் பஹவாரி | 30,900 | |
ஜெகோரி மாவட்டம் | சாங்கி இ மஷா | 171,600 | |
கோக்கியானி மாவட்டம் | கோக்கியானி | 19,600 | |
குவாஜா உமரி மாவட்டம் | குவாஜா உமரி | 18,400 | |
மலேஸ்தான் மாவட்டம் | மலேஸ்தான் | 79,800 | |
முக்கூர் மாவட்டம் | முக்கூர் | 48,900 | |
நவா மாவட்டம் | நவா | 28,900 | |
நவூர் மாவட்டம் | து அபி | 91,900 | |
குவாராபாக் மாவட்டம் | குவாராபாக் | 138,800 | |
இராசிதன் மாவட்டம் | இராசிதன் | 17,500 | |
வகாஸ் மாவட்டம் | வகாஸ் | 37,500 | |
ஜனா கான் மாவட்டம் | தாடோ | 12,200 |
புகழ் பெற்றவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.