From Wikipedia, the free encyclopedia
கனகஹள்ளி (Kanganahalli), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் வடக்கில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்த, பேரரசர் அசோகர் காலத்திய பௌத்த பெருந்தூபிகள் கொண்ட தொல்லியல் கிராமம் ஆகும். இது சன்னதிக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]
கனகஹள்ளி
| |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 16.835433°N 76.932541°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | குல்பர்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.5 km2 (0.6 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 585218 |
தொலைபேசி குறியீடு எண் | 08474 |
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கனகஹள்ளி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தது.[2] கனகஹள்ளி தொல்லியல் களம் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு முடிய காலத்தவை என அகழாய்வில் தெரிய்வந்துள்ளது. கிமு முதல் நூற்றாண்டில் கனகஹள்ளி கிராமத்தில் பௌத்த தூபி மற்றும் விகாரைகள் நிறுவப்பட்டது. இதனை கிபி 3 - 4-ஆம் நூற்றாண்டு வரை, மகாயானம் மற்றும் ஈனயானம் பௌத்தத் துறவிகள் பராமரித்தார்கள். சாதவாகனர் ஆட்சியின் போது, அமராவதி தொல்லியல் களத்தின் கட்டிட கலைத் தாக்கம், கனகஹள்ளி பௌத்த தொல்லியல் களத்தின் மீது ஏற்பட்டது.[3]
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1994 - 1998 காலத்தில் கனகஹள்ளி தொல்லியல் களத்தை ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான தூபிகள், புத்தரின் சிற்பங்கள், புத்தரின் பாத அச்சுகள், இயக்கர்களின் சிற்பங்கள், விகாரைகளின் செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டது. மேலும் சாதவாகனர் அரசர்கள் மற்றும் புத்தர் ஜாதக கதைகள் தொடர்பான கதைகளின் கல்வெட்டுக்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது.
கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி முதல் நூற்றாண்டு காலத்திய ஒரு நீண்ட கல்வெட்டும், 145 குறு கல்வெட்டுகளும் கனகஹள்ளி அகழாய்வின் போது கிடைத்தது. அவைகளில் குறிப்பிடத்தக்கது இராய அசோகா என பிராமி எழுத்துமுறையில் பொறித்த கல்வெட்டாகும்.[7] Kanaganahalli in Karnataka is the site with an inscription in Brahmi script reading "Ranyo Ashoka" (King Ashoka) and a sculpture of King Ashoka.[8] [9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.