ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்பது 2018 முதல் 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த பருவத்தின் கதை இந்தி மொழி தொடரான 'போதோ பகி' என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.[1]
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | (வசனம்) பி.மாரிமுத்து |
திரைக்கதை | முத்துராஜ் என்கிற த.ராஜாஜி |
இயக்கம் | ஆர். தேவேந்திரன் (1-353) ஆர்.டி.நாரயணமூர்த்தி (354-1016) |
நடிப்பு | |
இசை | ஹரி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 1016 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஷார்ஷா |
ஒளிப்பதிவு | க. ராஜீ |
தொகுப்பு | சரவணன் |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஜோனி பிலிம்சு (2019-2020) சுருதி புரொடக்சன்சு (2020-2021) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 23 ஏப்ரல் 2018 – 24 அக்டோபர் 2021 |
Chronology | |
முன்னர் | றெக்கை கட்டி பறக்குது மனசு (21:30) |
தொடர்புடைய தொடர்கள் | போதோ பஹு |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்த தொடர் ஆர். தேவேந்திரன் மற்றும் ஆர்.டி.நாரயணமூர்த்தி இயக்கத்தில் அஷ்வினி, வசந்குமார் மற்றும் புவியரசு போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]இது பல பிரச்சனைகளை மற்றும் கஷ்டங்கள்களை கடந்து வரும் ராசாத்தி என்ற குண்டுப் பெண்ணின் திருமண வாழ்க்கையை பற்றிய கதை ஆகும்.[3][4] இந்த தொடர் 23 ஏப்ரல் 2018 முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 24 அக்டோபர் 2021 அன்று 1016 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடரின் இரண்டாம் பருவம் ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி என்ற பெயரில் அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் முதல் பருவத்தின் தொடர்ச்சியாகவும் ராசாத்தி, இனியன் மற்றும் அவர்களது மகளான பூமிகாவை சுற்றி நகர்கிறது.
தொடரின் பருவங்கள்
பகுதிகள் | அத்யாயங்கள் | முதலில் ஒளிபரப்பப்பட்டது | ||
---|---|---|---|---|
முதலில் ஒளிபரப்பப்பட்டது | கடைசியாக ஒளிபரப்பப்பட்டது | |||
1 | 1025 | 23 ஏப்ரல் 2018 | 24 அக்டோபர் 2021 | |
2 | 25 அக்டோபர் 2021 | - |
கதைச் சுருக்கம்
ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும்.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- அஷ்வினி - ராசாத்தி இனியன்
- வசந்குமார் (2018-2019) → புவியரசு (2019-2021) - இனியன்
இனியன் குடும்பத்தினர்
- சுவாதி - கண்மணி குமரன்; மரகதத்தின் மருமகள்
- ஹேமந்த் (2018-2019) → விஷ்ணுகாந்த் (2019-2021) - குமரன்; மரகதத்தின் மகன்
- லட்சுமி (2018-2019) → கவிதா சொலைராஜன் - (2020-2021) மங்கை பாரி; இனியனின் தாய்
- பிந்து அனீஷ் (2018-2019) → உமா ராணி (2020-2021) - மரகதம் நேசமணி; இனியனின் பெரியம்மா
- ரவி வர்மா - நேசமணி; இனியனின் பெரியப்பா
- பிரபகரன் சந்திரன் - பாரி; இனியனின் தந்தை
- சைரா பானு - புனிதா கபிலன்; மரகதத்தின் மகள்
ராசாத்தி குடும்பத்தினர்
- சபிதா ஆனந்த் (2018-2019) → கீதா சரஸ்வதி (2019-2021) - செண்பகவல்லி; ராசாத்தியின் தாய்
- சுபத்திரா - பொன்னி இளங்கோ; ராசாத்தியின் அண்ணி
- கோவை பாபு (2018-2019) → விஜய் (2020-தற்போது) - இளங்கோ; ராசாத்தியின் அண்ணன்
- ஜீவா ரவி - ராசாத்தியின் தந்தை
- சுதர்சனம் - கபிலன்; ராசாத்தியின் தம்பி
- மனிஷா - இலக்கியா; பொன்னியின் மகள்
துணை கதாபாத்திரம்
- அழகப்பன் - அழகு; இனியனின் நண்பன்
- அக்சயா - ஐஸ்வர்யா; அழகுவின் மனைவி
நேர அட்டவணை
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் |
---|---|---|
13 செப்டம்பர் 2021 - 23 அக்டோபர் 2021 | 13:30 | |
5 செப்டம்பர் 2021 - 11 செப்டம்பர் 2021 | 22:00 | |
23 ஏப்ரல் 2018 - 5 செப்டம்பர் 2021 | 21:30 | |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | பரிந்துரை | பெறுநர் | முடிவு |
---|---|---|---|---|
2018 | 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] | சிறந்த தொடர் | ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி | பரிந்துரை |
சிறந்த கற்பனை தொடர் | பரிந்துரை | |||
விருப்பமான கதாநாயகி | அஷ்வினி | பரிந்துரை | ||
சிறந்த நடிகை | பரிந்துரை | |||
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை | வெற்றி | |||
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் | வசந்குமார் | பரிந்துரை | ||
சிறந்த அம்மா | சபிதா ஆனந்த் | பரிந்துரை | ||
சிறந்த அப்பா | பிரபு சந்திரன் | பரிந்துரை | ||
ரவி வர்மா | பரிந்துரை | |||
சிறந்த துணை நடிகை | சுபத்திரா | பரிந்துரை | ||
சுவாதி | பரிந்துரை | |||
சிறந்த துணை நடிகர் | ஹேமந்த் | பரிந்துரை | ||
சிறந்த மாமியார் | லட்சுமி | வெற்றி | ||
பிந்து | பரிந்துரை | |||
சிறந்த மருமகள் | அஷ்வினி | பரிந்துரை | ||
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2018 | 7.2% | 7.6% |
2019 | 7.4% | 8.2% |
2020 | 6.5% | 7.8% |
5.6% | 7.2% | |
2021 | 3.2% | 4.2% |
2.8% | 3.5% | |
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.