ஐமன் அழ்-ழவாகிரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐமன் முகம்மது ரபீ அழ்-ழவாகிரி (Ayman Muhammad Rabaie al-Zawahiri[6]; 19 சூன் 1951 – 31 சூலை 2022)[7] என்பவர் எகிப்தில் பிறந்த மருத்துவரும், இறையியலாளரும், 2011 முதல் 2022 சூலையில் இறக்கும் வரை அல் காயிதா தீவிரவாதக் குழுவின் தலைவராகவும் இருந்தவர்.[8] இவர் எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின் தலைவர் அப்த்-அல்-சுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் அமீராக இருந்தார். உசாமா பின் லாதின் நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பின்னர் அல்கைதாவின் தலைவரானார். இவர் முன்னதாக ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்திய இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் மூத்த உறுப்பினராக இருந்தார். 2012 இல், இவர் முசுலிம் நாடுகளில் உள்ள மேற்குலகத்தவரைக் கடத்துமாறு முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டவர்.[9]
Remove ads
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் பின்னர், இவரைக் கைது செய்யத் தகவல் தருவோருக்கு 25 மில்லிய அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளிப்பதாக அமெரிக்க அரசுத் திணைக்களம் அறிவித்திருந்தது.[10][11] 1999 இல், இவர் மீது ஐக்கிய நாடுகளின் அல்-கைதா தடைகள் குழு உலகளாவிய தடைகளை விதித்திருந்தது.[12]
அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை 1986ஆம் ஆண்டு ஜித்தாவில் சந்தித்தார்.[13] அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு அரபி , ஆங்கிலம் [14][15] மற்றும் பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி உண்டு.
1998ஆம் ஆண்டு அல் சவாகிரி எகிப்திய இசுலாமிய ஜிகாத் இயக்கத்தை அல்காயிதாவுடன் முறையாக இணைத்தார். அல்காயிதாவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, அல் ழவாகிரி அல்காயிதாவின் நிறுவன காலத்திலிருந்தே பணி புரிந்தவர் என்றும் அதன் ஆலோசனை அவையின் மூத்த உறுப்பினராக விளங்கினார் என்றும் அறியப்படுகிறது. பின் லாதினின் "தளபதி" என்று இவர் குறிப்பிடப்பட்டாலும், பின் லாதினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் இவரை அல்காயிதாவின் உண்மையான "அறிவுத்திறன்" எனக் குறிக்கிறார்.[16]
2022 சூலை 31 அன்று, அழ்-ழவாகிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றின் மூலம் காபுல் நகரில் வைத்துக் கொல்லப்பட்டார்.[17]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads