From Wikipedia, the free encyclopedia
ஐந்தாம் கிளியோபாட்ரா (Cleopatra V) (கிமு 69–57) எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் பார்வோன் பனிரெண்டாம் தாலமியின் சகோதரியும் மற்றும் இராணியும் ஆவார். இவர் பதினொன்றாம் தாலமி அல்லது பத்தாம் தாலமிக்கும், தாய் மூன்றாம் பெரெனீசுக்கும் பிறந்தவர். இவரது குழந்தைகள் நான்காம் பெரெனீஸ், ஏழாம் கிளியோபாற்றா[3], நான்காம் அர்சினோ, 13-ஆம் தாலமி மற்றும் 14-ஆம் தாலமி ஆவார். இவர் தனது கணவர் பனிரெண்டாம் தாலமியின் இறப்பிற்குப் பின் தனது மகள் நான்காம் பெரெனீசுடன் இணைந்து எகிப்தை கிமு 58–57களில் ஆட்சி செய்தார்.
ஐந்தாம் கிளியோபாட்ரா | |
---|---|
கிளியோபாட்ரா V டிரைபெனா | |
![]() ஐந்தாம் கிளியோபாட்ராவின் சிற்பம் [2] | |
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச இராணி | |
ஆட்சிக்காலம் | பார்வோன் பனிரெண்டாம் தாலமியுடன் இணை ஆட்சியாளர் |
முன்னவர் | பனிரெண்டாம் தாலமி (சகோதரர் மற்றும் கணவர்) |
பின்னவர் | நான்காம் பெரெனீஸ் (மகள்) |
அரச பட்டங்கள் | |
துணைவி(யர்) | பனிரெண்டாம் தாலமி (சகோதரன் மற்றும் கணவர்) |
பிள்ளைகள் | நான்காம் பெரெனீஸ் ஏழாம் கிளியோபாற்றா நான்காம் அர்சினோ 13-ஆம் தாலமி 14-ஆம் தாலமி |
தந்தை | உறுதியாகத் தெரியவில்லை: பதினொன்றாம் தாலமி அல்லது பத்தாம் தாலமி |
தாய் | உறுதியாகத் தெரியவில்லை: மூன்றாம் பெரெனீஸ் |
இறப்பு | அண். 69–68 BC or அண். 57 BC |
Seamless Wikipedia browsing. On steroids.