From Wikipedia, the free encyclopedia
தம்பிப்பிள்ளை ஐசாக் தம்பையா (Rev. Tambi Piḷḷai Isaac Tambyah, 19 ஆகத்து 1869 - 1941) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார்.
ஐசாக் தம்பையா Rev. Isaac Tambyah | |
---|---|
1930 இல் ஐசாக் தம்பையா | |
பிறப்பு | மானிப்பாய், யாழ்ப்பாணம் | 19 ஆகத்து 1869
இறப்பு | 1941 (அகவை 71–72) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | இறையியலாளர், எழுத்தாளர் |
சமயம் | கிறித்தவர் |
பெற்றோர் | ஆறுமுகம் தம்பிப்பிள்ளை |
வாழ்க்கைத் துணை | மங்களநாயகம் தம்பையா |
ஐசாக் தம்பையா யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் தம்பிப்பிள்ளை (இறப்பு: பெப்ரவரி 5, 1905) என்பவருக்கு 1869 ஆகத்து 19 இல் பிறந்தவர்.[1] தந்தை தம்பிப்பிள்ளை ஆசிரியரும், மானிப்பாய் செம்பா உடையார் என்பவரின் பேரனும் ஆவார்.[1]
ஐசாக் தம்பையா தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரியிலும் கற்றார்.[1] தோமையர் கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார். இளம் வயதிலேயே Garland of Ceylon verses, By the Bridge ஆகிய இரண்டு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டார்.[1]
பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 1899 ஆம் ஆண்டில் சட்டவாளராக அங்கீகரிக்கப்பட்டு,[1] 1901 வரை கொழும்பிலும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் மீண்டும் 1908 ஆம் ஆண்டில் மீண்டும் கொழும்பு திரும்பி உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப்[2] பணியாற்றினார்.[3]
Ceylon Law Review என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3][4] 1904 ஆம் ஆண்டில் The Christian Review என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்.[3]
1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் சட்டவாளர் கழகத்தில் (Gray's Inn) உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் எழுத்தாளர்களின் ஒருங்கிணைந்த கழகத்தின் (Incorporated society of authors) உறுப்பினராகவும் சேர்ந்தார். இக்கழகத்தில் இணந்த முதலாவது இலங்கையர் இவரே.[3] பின்னர் 1913 ஆம் ஆண்டில் அங்கிருந்து மலாயா சென்று பினாங்கு மாநிலத்தில்]] வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
ஐசாக் தம்பையா மலாயாவில் இருந்த போது இறையியல் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் இறையியலில் பட்டம் பெற்று திருச்சபையில் குருவானவராகப் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி தமது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு முழு நேர இறையியலில் நாட்டம் செலுத்தினார்.[5] 1924 இல் உதவிக்குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அடுத்த இரண்டாண்டுகளில் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டு சுண்டிக்குளி பரி. யோவான் திருச்சபையில் பணியில் அமர்த்தப்பட்டார்.[1] அங்கு அவர் 1938 வரை பணியாற்றினார். பின்னர் பண்டாரவளையில் முதன்மைக் குருவாகப் பணியில் அமர்த்தப்பட்டார்.[5] 1940களின் ஆரம்பத்தில் கொழும்பு சான் செபஸ்டியன், புனித திரித்துவத் திருச்சபையில் பணியாற்றினார். கொழும்பு இறையியல் பாடசாலையில் துணை அதிபராகவும் பணியாற்றியிருந்தார்.[1]
1934 சூன் 9 அன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆரம்பிக்கும் நோக்கோடு நிறுவப்பட்ட குழுவின் துணைத் தலைவராக ஐசாக் தம்பையா இருந்துள்ளார்.[6]
ஐசாக் தம்பையா தெல்லிப்பழையைச் சேர்ந்த ஜே. டபிள்யூ. பார் குமாரகுலசிங்க முதலியார் என்பவரின் இளைய மகளான மங்களநாயகம் என்பவரைத் திருமணம் புரிந்தார். மங்களநாயகம் நொறுங்குண்ட இருதயம் என்ற பெயரில் 1914 ஆம் ஆண்டிலும்,[3][7][8] அரியமலர் என்ற பெயரில் 1926 இலும்[7] இரண்டு புதின நூல்களை எழுதினார். இவரது தந்தை குமாரகுலசிங்க முதலியார் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.