கணிதத்துறைக்கு வழங்கப்படும் நோபல் பரிசு. From Wikipedia, the free encyclopedia
ஏபெல் பரிசு (Abel Prize) என்பது நார்வே மன்னரால் ஆண்டுதோறும் உலகளாவிய கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு விருதாகும். 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஏபெல் பரிசு | |
---|---|
விளக்கம் | கணிதத் துறையில் மிகச்சிறந்த அறிவியல் ஆக்கத்திற்காக |
நாடு | நோர்வே |
வழங்குபவர் | நோர்வே அரசு |
முதலில் வழங்கப்பட்டது | 2003 |
இணையதளம் | abelprize.no |
சுவீடனாலும் நார்வேயினாலும் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசு கணிதத்தை உள்ளடக்கவில்லை என்பதால் சோஃபஸ் லை (Sophus Lie) என்பவர் கணிதத்திற்கு தனியே வழங்க வேணும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இரண்டாம் ஆஸ்கார் மன்னர் இதற்காக நிதியையும் ஒதுக்க திட்டங்கள் வரைந்தார். ஆனாலும் 1905இல் சுவீடனும் நார்வேயும் பிரிந்ததில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
நார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள். இது வரையில் இப்பரிசைப் பெற்றவர்கள்:
ஆண்டு | விருதாளர்(கள்) | படம் | தேசியம் | குறிப்பு | |
---|---|---|---|---|---|
2003 | ஜீன்-பியேர் செரே | பிரான்சு | "இடவியல், இயற்கணித வடிவவியல், எண் கோட்பாடு இவை உள்ளிட்ட பல கணிதப்பிரிவுகள் தற்கால உருவங்களை அடைய அடிக்கல் நாட்டி வழிகோலியதற்காக". | ||
2004 | மைக்கேல் அட்டீயா ஐசடோர் சிங்கர் |
|
ஐக்கிய இராச்சியம் | “அட்டீயா-சிங்கர் குறியெண் தேற்றம் என்பதை உண்டாக்கி, நிறுவலும் படைத்து, அதன் மூலம் இடவியல், வடிவவியல், பகுவியல் இவைகளை ஒன்று சேர்த்ததற்காகவும் கணிதவியலுக்கும் இயற்பியலின் தத்துவ அடித்தளங்களுக்கும் பாலமமைத்த புதுமைக்காகவும்.” | |
2005 | பீட்டர் டி. லாக்ஸ் | அங்கேரி / ஐக்கிய அமெரிக்கா | “பகுதி வகையீட்டுச் சமன்பாடுகளின் கோட்பாடு, பயன்பாடு, தீர்வுக் கணிப்பு இவைகளுக்கெல்லாம் ஒரு ராஜபாட்டையைத் திறந்துவிட்டதற்காக.” | ||
2006 | லெனார்ட் கார்ல்சன் | சுவீடன் | “இசைப்பகுவியலுக்கும் இயக்கவியல் திட்டக் கோட்பாட்டிற்கும் அவர் அளித்திருக்கும் கருவூலப் பங்களிப்பிற்காகவும் அவைகளின் ஆழத்திற்காகவும்”. | ||
2007 | எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் | இந்தியா / ஐக்கிய அமெரிக்கா | “நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப் பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக "பெரிய விலக்கங்கள் கோட்பாடு”. | ||
2008 | ஜான் க்ரிக்ஸ் தாம்ப்சன் ஜாக் டிட்ஸ் |
|
ஐக்கிய அமெரிக்கா; பெல்ஜியம் / பிரான்சு |
“இயற்கணிதத் துறையில் குறிப்பாக குலக்கோட்பாட்டுத்துறைக்கு அவர்களுடைய சாதனைநிறைந்த பங்களிப்புகளுக்காக”. | |
2009 | மிகயில் குரோமோவ் | உருசியா / பிரான்சு | “வடிவவியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக” | ||
2010 | ஜான் டேட் | ஐக்கிய அமெரிக்கா | "எண்ணியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக" | ||
2011 | ஜோன் மில்னர் | அமெரிக்கர், ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா[1] | "இடவியல், வடிவவியல், இயற்கணிதம் ஆகியவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக"[2] | ||
2012 | எந்திரே செமெரேடி | அங்கேரிய அமெரிக்கர், ஐக்கிய அமெரிக்கா[3] | "இலக்கமியல் கணிதம், கொள்கைமுறைக் கணினியியலில் அடிப்படைப் பங்களிப்புகளுக்காகவும், கூட்டல் எண்ணியல், மற்றும் நிகழ்விரவலியல் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தியமைக்காகவும்"[4] | ||
2013 | பியேர் தெலின் | பெல்ஜியர் | "இயற்கணித வடிவவியலில் பங்களிப்புகளுக்காகவும், எண்கோட்பாட்டில் அதன் தாக்கம், உருமாதிரியாக்கக் கோட்பாடும் அது தொடர்பான படிப்புகள்"[5] | ||
2014 | யகோவ் சினாய் | உருசியர் அமெரிக்கர் |
"for his fundamental contributions to dynamical systems, ergodic theory, and mathematical physics" | [6] | |
2015 | ஜான் எப். நாஷ், இளை.; லூயி நிரென்பெர்கு |
| |
அமெரிக்கர்; கனடியர்/அமெரிக்கர் |
"for striking and seminal contributions to the theory of nonlinear partial differential equations and its applications to geometric analysis" | [7] |
2016 | ஆண்ட்ரூ வைல்சு | பிரித்தானியர் | “பெய்ரி டி ஃபெர்மட்டின் கடைசித் தேற்றத்திற்கு.... ...வியத்தகு நிரூபணம் வழங்கி, எண் கோட்பாட்டில் புதிய காலத்தை தொடங்கியதற்காக” | [8][9] | |
2017 | யுவிசு மெய்யர் | எக்கோல் நார்மேல் சுப் ரியுரி பாரிஸ் சாக்காலே | “அலைவரிசைகளின் கணிதக் கோட்பாட்டின் வளர்ச்சியில் இவரது முக்கிய பங்கிற்கு” | [11] | |
2018 | இராபர்ட் லாங்லேட்டுசு | அமெரிக்கர்; கனடியர்/அமெரிக்கர் |
""பிரதிநிதித்துவக் கோட்பாட்டை எண் கோட்பாட்டுடன் இணைக்கும் இவரது தொலைநோக்கு திட்டத்திற்காக.." | [12] | |
2019 | கரென் உஹெலென்பெக் | அமெரிக்கர் | "வடிவியல் பகுதி வேறுபாடு சமன்பாடுகள், அளவீட்டுக் கோட்பாடு மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகள் மற்றும் பகுப்பாய்வு, வடிவியல் மற்றும் கணித இயற்பியல் ஆகியவற்றில் இவரது பணியின் அடிப்படை தாக்கத்திற்காகவும் இவரது முன்னோடி சாதனைகளுக்காகவும்" | [13][14] | |
2020 | ஹிலெல்லல் பர்ஸ்டென்பர்க் | ஜெர்மனியர் | "குழு கோட்பாடு, எண் கோட்பாடு மற்றும் காம்பினேட்டரிக்ஸ் ஆகியவற்றில் நிகழ்தகவு மற்றும் இயக்கவியலில் இருந்து முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக | [15] | |
கிரிகோரி மார்குலிசு | சோவியத் ஒன்றியம் | ||||
2021 | லசுலோ லாவோசு | ஹங்கேரியன் | "கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் தனித்துவமான கணிதத்திற்கான இவர்களின் அடித்தள பங்களிப்புகளுக்காகவும், நவீன கணிதத்தின் மையத் துறைகளில் அவற்றை வடிவமைப்பதில் இவர்களின் முக்கிய பங்குக்காகவும்". | [16] | |
அவி விக்டெர்சன் | இசுரேலியர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.