From Wikipedia, the free encyclopedia
சர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla, அக்டோபர் 22, 1907 - டிசம்பர் 10, 1995) கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபதாவது நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்து உலகப்புகழ் பெற்ற ஒரு இந்திய-அமெரிக்க கணிதவியலர்.
சர்வதமன் சௌலா Sarvadaman Chowla | |
---|---|
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | அக்டோபர் 22, 1907
இறப்பு | திசம்பர் 10, 1995 88) லராமி, வயோமிங், ஐக்கிய அமெரிக்கா | (அகவை
துறை | கணிதம் |
பணியிடங்கள் | Institute for Advanced Study கான்சாஸ் பல்கலைக்கழகம் கொலராடோ ப்லகலைக்கழகம் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஜான் லிட்டில்வூட் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜான் பிரீட்லாண்டர் |
விருதுகள் | பத்ம பூசன் |
பிறப்பு: 22 அக்டோபர் 1907 இங்கிலாந்தில். தந்தை: கோபால் சிங் சௌலா. கணித வியலர். லாஹூர் அரசுக்கல்லூரியில் பேராசிரியர்.
சிறுவயதிலேயே சர்வதமன் கணிதத்தில் சிறந்து விளங்கினார். கல்லூரியில் இளநிலை வகுப்பில் படிக்கும்போதெ இந்தியக் கணிதக்கழக ஆய்வுப் பத்திரிகையின் (Journal of the Indian Mathematical Society) 'கணக்குகள்' பிரிவுக்கு பல கணக்குகள் வழங்கி வந்தார். 1928இல் லாஹூர் அரசுக்கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
தந்தை அவரை மேல்படிப்பிற்கு 1929 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டு அதே ஆண்டு பாரிசில் காலமானார். தந்தை இறந்தது சர்வதமனுக்கு ஒரு பேரிடியாக இருப்பினும் அதை சமாளித்துக்கொண்டு தன் ஆராய்ச்சி வேலையில் மூழ்கினார். பேராசிரியர் ஜே. ஈ. லிட்டில்வுட்டின் இயக்கத்தின் கீழ் Analytic Theory of Numbers என்ற பிரிவில் Thesis ஒன்றை தன் கைப்பட எழுதி 1931 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.