எஸ். குமாரசாமி ரெட்டியார்

From Wikipedia, the free encyclopedia

எஸ். குமாரசாமி ரெட்டியார்

திவான் பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார் (ஏப்ரல் 23, 1876 - ?) ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் கல்வி மற்றும் சுங்கத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

Thumb
நீதிக்கட்சித் தலைவர்களுடன் குமாரசாமி ரெட்டியார் (இடமிருந்து எட்டாவதாக நிற்பவர்)

திருநெல்வேலியில் பிறந்த குமாரசாமி திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றார். 1926 வரை அரசு தரப்பு வழக்கறிஞராக திருநெல்வேலியில் பணியாற்றினார். 1920களின் இறுதியில் நீதிக்கட்சியில் இணைந்தார். 1930 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பாக சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தெர்ந்தெடுக்கப்பட்டார். 1930-36 காலகட்டத்தில் முனுசாமி நாயுடு மற்றும் பொப்பிலி அரசர் ஆகியோரின் அமைச்சரவைகளில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1936ல் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[1][2]

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.