எஸ்.எல்.வி என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயற்கைக்கோள் செலுத்தி வண்டி (Satellite launch vehicle) என்ற பெயரில் முதன்முறையாக[1] தயாரித்த ஏவுகலமாகும். இந்த ஏவுகலம் தயாரிப்பதற்கான திட்டம் 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. ஏவுகலம் தயாரிப்பதற்கான திட்டத்தின் முதல் திட்டத்தலைவராக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பணியாற்றினார். இதன் செயற்கைகோள் எடை 40 கிலோ கிராம்[2]. இதில் உள்ள 4 உறுப்பு கலங்களும் திட எரிபொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதன் முதல் சோதனையானது ஆகத்து 10,1979ம் ஆண்டு நடைபெற்றது.[3] இச்சோதனை தோல்வியில் முடிந்தது.அதன் பிறகு 3 சோதனைகள் நடத்தப்பெற்றன. அதில் 2[4] மற்றும் 4 ஆம் சோதனைகள் முழு வெற்றி பெற்றன. இதன் கடைசி சோதனை ஏப்ரல் 17, 1983 அன்று நடத்தப்பெற்றது.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.