From Wikipedia, the free encyclopedia
எலன் தோடுசன் பிரின்சு (Helen Dodson Prince) (திசம்பர் 31, 1905 – பிப்ரவரி 4, 2002) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிச்சிகன் ப்ல்கலைக்கழகத்தில் முன்னோடியாக சூரியத் தணல்வீச்சுகள் பற்றி ஆய்வு செய்த்ஹவர் ஆவார்.
எலன் தோடுசன் பிரின்சு Helen Dodson Prince | |
---|---|
பிறப்பு | திசம்பர் 31, 1905 பால்டிமோர், மேரிலாந்து |
இறப்பு | பெப்ரவரி 4, 2002 96) ஆர்லிங்டன், வர்ஜீனியா | (அகவை
துறை | வானியல் |
பணியிடங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | எபர் தவுசுட்டு கர்ட்டிசு |
அறியப்படுவது | சூரியத் தணல்வீச்சுகள் |
விருதுகள் | வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1955) |
தோடுசன் எனப்படும் எலன் பிரின்சு மேரிலாந்து பால்டிமோரில் 1905 திசம்பர் 31 இல் எலன் வால்டேருக்கும் என்றி கிளே தோடுசனுக்கும் மகவாகப் பிறந்தார். இயற்பியலிலும் கணிதத்திலும் வல்லமை பெற்ற இவர், கவுச்சர் கல்லூரியில் கணித்வியல் படிக்க முழுக் கல்விநல்கையைப் பெற்றார். இங்கு இவர் 1927 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் தன் பட்டப்படிப்பின்போது வானியல் பயில பேராசிரியர் புளோரன்சு பி. இலெவிசு ஆர்வம் ஊட்டியுள்ளார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படித்து 1932 இல் முதுவர் பட்டமும் 1934 இல் முனைவர் பட்டமும் வானியலில் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரையின் தலைப்பு " 25 ஓரியானிசு கதிர்நிரல் ஆய்வு (A Study of the Spectrum of 25 Orionis)" என்பதாகும்.[1]
இவர் வெல்லெசுலி கல்லூரியில் 1933 முதல் 1945 வரை வானியல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். இவர் 1934, 1935 ஆம் ஆண்டுக் கோடைக் காலத்தில் மரியா மிட்செல் வான்காணகத்தில் காலங்கழித்துள்ளார். அங்கு 25 ஓரியானிசு கதிர்நிரல் ஆய்வில் தொடர்ந்து மீண்டும் ஈடுபட்டுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் பின்னர் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இவர் 1938, 1939 ஆம் அண்டுக் கோடைக் காலத்தில் பாரிசு வான்காணகத்தில் ஆய்வு செய்யும்போது இவரது ஆர்வம் சூரியச் செயல்பாடுகளுக்குத் திரும்பியது. இவர் 1943 முதல் 1945 வரை ம்சாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கதிர்வீச்சு ஆய்வகத்தில் பணிபுரியும்போது, இவர் இராடார் உருவாக்கத்தில் கணிசமான பங்களிப்புகள் செய்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், இவர் கவுச்சர் கல்லூரிக்குத் திரும்பிவந்து சேர்ந்தார். அங்கு இவர் 1945 முதல் 1950 வரை வானியல் பேராசிரியராக இருந்தார். இவர் தன் ஆய்வை 1947 இல் ஆய்வை மெக்மேத் கல்பர்ட் வான்காணகத்தில் தொடங்கினார். உடன் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து விலகி, மிச்சிகனில் இணை இயக்குந்ராகவும் வானியல் பேராசிரியராகவும் சேர்ந்தார்.[1][2]
இவர் 1932 இல் கவுச்சர் கல்லூரியில் இருந்து தீன் வான் மீட்டர் ஆய்வுநல்கையைப் பெற்றார். இவர் 1954 இல் வானியலுக்கானஆன்னி ஜம்ப் கெனான் விருதை பெற்றார் இவர் 1974 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்து புலத் தனித்தகைமை ஈட்ட விருதைப் பெற்றார். இவர் தன் வாழ்நாள் முழுவது சூரியத் தணல்வீச்சுக் குறித்து 130 அளவுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[2] [3][4] [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.