2ஆவது மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
மு. அய்யாக்கண்ணு (பிறப்பு ஆகத்துட் 15, 1927) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். அவர் பெரம்பலூர் மாவட்டத்தின் லாடபுரம் கிராமத்தில் எஸ். முத்துசாமிக்கு மகனாகப் பிறந்தார்..[1] சிதம்பரம்,, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில், பி.ஏ. (கௌரவ பட்டம்.) பெற்றாா்.[2] 1949 ஆம் ஆண்டில் இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின சமூக சேவை சங்கத்தின் செயலாளா் ஆனாா். 1951 இல் வரலாறு மற்றும் அரசியல் சங்கத்தின் தலைவா் ஆனாா். அவர் சென்னை தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர் சங்க செயலாளராகவும் பணியாற்றினார்.
அவர் 1953 ஆம் ஆண்டில் புவனேஸ்வரிவை மணந்தார். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் (இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்) உள்ளனா். 1957 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு (இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபை) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளராக தாழ்த்தப்பட்ட தொகுதியில் போட்டியிட்டார். பின்னாளில் அவர் மேற்கு சென்னையில் உள்ள அண்ணாநகாில் வாழ்ந்து வந்தாா்..
Seamless Wikipedia browsing. On steroids.