From Wikipedia, the free encyclopedia
என்றிக் கிறிஸ்டோபல் வான் தெ அல்ஸ்ட் (Hendrik Christoffel "Henk" van de Hulst[1] 19 நவம்பர் 1918 - 31 சூலை 2000) ஒரு டச்சு வானியலாரும். கணிதவியலாரும் ஆவார்.
என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட் Hendrik C. van de Hulst | |
---|---|
1977 இல் என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட் | |
பிறப்பு | ஊட்ரெக்ட், நெதர்லாந்து | 19 நவம்பர் 1918
இறப்பு | 31 சூலை 2000 81) லைடன், நெதர்லாந்து | (அகவை
தேசியம் | இடச்சு |
துறை | வானியல் |
பணியிடங்கள் | லைடன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | 21 செமீ மீநுண் வரி |
விருதுகள் | என்றி டிரேப்பர் விருது (1955) எடிங்டன் விருது (1955) இரம்போர்டு விருது (1964) புரூசு விருது (1978) கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1995) |
உட்ரெச்ட்இல் 1944இல் மாணவராக இருந்தபோதே இவர் நொதுமல்நிலை உடுக்கணவெளி நீரகத்தில் 21 செமீ மீநுண் வரி நிலவுவதை முன்கணித்தார். இவ்வரி கண்டறியப்பட்ட்தும் இவர் ஜான் ஊர்ட், சி. ஏ. முல்லர் ஆகியோருடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பின் ஒளியில் நமது விண்மீன் பேரடையான பால்வழியின் (Milky way) நொதுமல்நிலை நீரகப் பரவலைக் கதிர் வானியல் முறையால் வரைந்தார். இது அதன் சுருளி வடிவக் (spiral) கட்டமைப்பை வெளிப்படுத்தியது.
தான் ஓய்வுபெற்ற 1984 வரை வாழ்நாள் முழுவதும் லைடன் பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் வானியலில் விரிவாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். சூரிய ஒளிமுகட்டையும் உடுக்கணவெளி முகில்களையும் ஆய்வு செய்தார். 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு பன்னாட்டு விண்வெளித் திட்டங்களின் தலைவரானார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.