From Wikipedia, the free encyclopedia
எதித் க்ரசான் 1934 ஜனவரி 27ஆம் தேதி பிறந்த ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிரான்ஸ் நாட்டின் ஒரே பெண் பிரதமர் ஆவார். மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்த பிரஞ்சுப் பிரதமரும் இவரே.
எதித் க்ரசான் | |
---|---|
![]() 2007ல் எதித் க்ரசான். | |
ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஐரோப்பிய ஆணையர் | |
பதவியில் ஜனவரி 23, 1995 – செப்டம்பர் 12, 1999 | |
பிரஞ்சு பிரதமர் | |
பதவியில் மே 15, 1991 – ஏப்ரல் 2, 1992 | |
குடியரசுத் தலைவர் | பிரான்சுவா மித்திரோன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சனவரி 1934 |
அரசியல் கட்சி | சோசலிசக் கட்சி (பிரான்சு) |
தொழில் | அரசியல்வாதி |
சோசலிசக் கட்சியைச் சேர்ந்த இவரை 1991 ஆண்டு, மே 15 ஆம் தேதி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் பிரதமர் பதவிக்கு நியமித்தார். எதித் க்ரசான் 1992 ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1992-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சோசலிசக் கட்சி போதுமான அளவு வெற்றி பெறாததால் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.
ஜப்பானியர்களின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்கும் போது "மஞ்சள் எறும்புகள் உலகத்தையே தனக்கு சொந்தமாக ஆக்கிக்கொள்ள நினைக்கின்றன" என்று அவர் பேசியதால் அவரை ஒரு இனவெறியர் எனச் சிலர் கருதினர்.[1][2][3] "ஓரினச் சேர்க்கை எனக்கு விசித்திரமாக உள்ளது. இது லத்தீன் பாரம்பரியத்தை விட ஆங்கிலோ சாக்சன் பாரம்பரியத்தில் அதிகமாக உள்ளது" என்று அவர் சொன்ன கருத்தும் விமர்சிக்கப்பட்டது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.