ஸ்பேஸ் எக்ஸ் From Wikipedia, the free encyclopedia
ஸ்பேஸ் எக்ஸ் (ஆங்கிலம்: SpaceX) என அறியப்படும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம் (Space Exploration Technologies Corporation) என்பது ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம். இது 2002 ம் ஆண்டு பேபால் இணையதள பண பரிவர்த்தனை தொழில்நுட்பத்தின் தொழில்முனைவர் எலான் மசுக் அவர்களால் தொடங்கப்பட்டது. இவர்கள் ஃபல்கன் 1, ஃபல்கன் 9 ஆகிய மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணை உந்துகல ஏவூர்திகளை உருவாக்கி உள்ளார்கள். இவர்கள் தற்போது ஃபல்கன் 9 ஆல் வான் சுற்றுப்பாதையில் ஏவக்கூடிய டரகன் விண்ணூர்தியை உருவாக்கி உள்ளார்கள். சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்பு இத்தகைய தொழில்நுட்பத்தை விருத்தி செய்தது இவர்களே ஆவார்கள். இது ஒரு தனியார் வணிக விண்வெளி நிறுவனம்.
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2002 |
நிறுவனர்(கள்) | எலொன் மஸ்க் |
தலைமையகம் | ஹாவ்தோர்ன், கலிபோர்னியா, அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | எலொன் மசுக் (நிறுவனர், முதன்மை செயல் அதிகாரி மற்றும் முதன்மை வடிவமைப்பாளர்) ஜின் சாட்வெல் (தலைவர் மற்றும் முதன்மை செயல்பாட்டு அதிகாரி)[1][2] டாம் முல்லெர் (துணைதலைவர், Propulsion)[3] |
தொழில்துறை | வான்வெளிப் பொறியியல் |
சேவைகள் | வானூர்தி ஏவுதல் |
பணியாளர் | 3,800 (அக்டோபர் 2013)[4] |
இணையத்தளம் | SpaceX.com |
Seamless Wikipedia browsing. On steroids.