From Wikipedia, the free encyclopedia
உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.[1] இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.[2][3] முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக யானைகள் நாள் World Elephant Day | |
---|---|
நாட்கள் | ஆகத்து 12 |
காலப்பகுதி | ஆண்டுதோறும் |
அமைவிடம்(கள்) | உலகளாவிய அளவில் |
Established | 12 ஆகத்து 2012 |
நிறுவனர் | பத்திரீசியா சிம்சு, யானைகள் மீளறிமுக அறக்கட்டளை |
வலைத்தளம் | |
worldelephantday |
Seamless Wikipedia browsing. On steroids.