உருளைக் கிழங்கு குடும்பம் என்பது (இலத்தீன்:Solanaceae; ஆங்கிலம்:nightshades) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 98 பேரினங்களும். அவற்றினுள் ஏறத்தாழ 2,700 இனங்களும் உள்ளன.[1] இக்குடும்பத் தாவரங்களுள் 21 பேரினங்களும். 700 க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.
வளரியல்பு
பெரும்பாலும் ஓராண்டு சிறுசெடிகளாக உள்ளன. (எ.கா. 'சொலானம் மெலாஞ்சினா') சில புதர் செடிகளாகவும் உள்ளன. (எ.கா. 'சொலானம் டார்வம்' (சுண்டைக்காய்) மற்றும் அரிதாக மரங்கள் (எ.கா. 'சொலனம். செய்சான்சியம்') இக்குடும்பத்தில் காணப்படுகின்றன.
Dimitri, M. 1987. Enciclopedia Argentina de Agricultura y Jardinería. Tomo I. Descripción de plantas cultivadas. Editorial ACME S.A.C.I., Buenos Aires.
Chilli: La especia del Nuevo Mundo (Article in Spanish by Germán Octavio López Riquelme regarding the biology, nutrition, culture and medical aspects of Chile.