From Wikipedia, the free encyclopedia
உருமறைப்பு (camouflage) என்பது ஒரு புலனுக்கெட்டாத வகையில் இருப்பதற்கான ஒரு உத்தியாகும். இது, மற்றபடி பார்வைக்குத் தென்படக்கூடிய உயிரினங்கள் அல்லது பொருட்கள், கவனத்தைத் தவிர்க்க சுழலிலிருந்து பிரித்துக் காண முடியாத வகையில் தங்களை அமைத்துக் கொள்வதை அனுமதிக்கிறது. புலியின் கோடுகள் மற்றும் ஒரு நவீன இராணுவ வீரரின் போர்ச்சீருடை ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுகள். உருமறைப்பு என்னும் கருத்தாக்கம் இத்தகைய விளைவை உருவாக்குவதற்கான பல்வேறு உத்திகளையும் உள்ளடக்கியது.
பொதுவாக கொன்றுண்ணிகள் போன்றவற்றிடமிருந்து மறைவதற்காக சில பொருட்களோடு மறைவது அல்லது கலந்து காணப்படுவதே உருமறைப்பு என்பதாகும்.
எளிதில் புலன்படாத நிறமாக்கம் என்பதே மிகவும் பொதுவான உருமறைப்பு வகையாகும். இது பெரும்பான்மையான உயிரினங்களில் காணப்படுகிறது. தான் இருக்கும் சூழலுக்குத் தகுந்த நிறத்தில் இருப்பதே ஒரு விலங்கிற்கு மிகவும் எளிமையான வழி. இதற்கான எடுத்துக்காட்டுகள் மான், அணில், துன்னெலி ஆகியவை (மரங்கள் அல்லது தூசு ஆகியவற்றிற்குப் பொருந்துவதாக) "மண் பண்பு" கொள்ளுதல், அல்லது சுறாவின் வெவ்வேறு நிறமாக்கத்தின் வழி அதன் நீலத் தோல் மற்றும் வெள்ளை நிற அடிவயிறு காணப்படுதல் (இவை மேலிருந்து மற்றும் கீழிறிந்து ஆகிய இரு வழிகளிலும் அவற்றைக் கண்டறிவதைக் கடினமாக்குகின்றன) ஆகியவையாகும். மேலும் நுணுக்கமான வடிவமைப்புகளை தட்டைச் சிறு மீன், அத்துப் பூச்சி மற்றும் தவளை போன்ற பல உயிரினங்களில் காணலாம்.
ஒரு உயிரினம் மேற்கொள்ளும் உருமறைப்பு உத்தி பல காரணிகளைப் பொறுத்து உள்ளது:
உதாரணமாக. கொன்றுண்ணி ஒருவண்ணமானி விலங்காக இருப்பின் பிறகு அதன் இரையான விலங்கு தனது சூழலுக்குத் தகுந்தவாறு நிறம் மாற்றிக்கொள்ள அவசியமில்லை.
விலங்குகள் இரு வழிகளில் நிறமாக்கம் கொள்கின்றன.
புலனாகாத நிறமாக்கமும் இவ்வாறான மாறுபாட்டினை உருவாக்கலாம்.
இது பருவ நிலை மாறுபாடுகளினாலோ அல்லது வெகு விரைவாக மாறி வரும் சுற்றுச் சூழல் நிலைகளினாலோ உருவாகலாம். எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் நரி குளிர்காலத்தில் வெண்ணிறத் தோலும் வேனிற்காலத்தில் பழுப்புத் தோலும் கொண்டிருக்கும். பாலூட்டி களுக்கும் பறவைகளுக்கும் முறையே புதிய உரோமத் தோலும் மற்றும் புதிய ஜோடி இறக்கைகளும் தேவைப்படும். ஆயினும், கணவாய் போன்ற சில வகை மீன்கள், தமது உடலில் ஆழமாக குரோமடோஃபோர் எனப்படும் நிறமி அணுக்களைக் கொண்டிருக்கலாம். அவற்றால், இந்நிறமிகளைக் கட்டுப்படுத்த இயலும்.
மீன் இனம் அல்லது நூடிபிராங்க் போன்றவை தமது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம், தமது நிறத்தை மாற்றியமைக்க இயலும். இருப்பினும், தனது நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக பரவலாக அறியப்பட்ட ஜந்து பச்சோந்தியேயாகும். இது உருமறைப்பு நோக்கங்களுக்காக அன்றி, தனது மனநிலையைப் பிரதிபலிக்கவே தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
வண்ணங்கள் மட்டும் அல்லது, தோலின் அமைப்பும் கூட பல சமயங்களில் புலனுக்கெட்டாத நிறமாக்கத்திற்கு உதவக் கூடும். வெளிக்கோடுகளின் மாறுபாட்டினால் பார்வைக் குழப்பம் உண்டாவதாக கிரைய்க்-ஓ பிரியான் கார்ன்ஸ்வீட் மாயத்தோற்றம் உரைக்கிறது. உதாரணமாக, ஒருவர் நாயை அதன் வண்ணத்தால் அன்றி வடிவத்தாலேயே புரிந்து கொள்கிறார். பெரும்பான்மையான நேரங்களில், ஒரு ஜந்துவின் உடலின் வெளிக் கோட்டுத் தோற்றங்களை புலனுக்கெட்டாத நிறமாக்கம் மாற்றி விடக் கூடும். பெண் பூனை போன்ற வீட்டுச் செல்லப் பிராணிகளில் இதைக் காணலாம். புலி, வரிக்குதிரை போன்ற விலங்குகளில் அவற்றின் உடல் முழுதுமாக உள்ள கோடுகள், அவை காடுகளில் தமது சூழலுடன், அதாவது முறையே காட்டுவெளி மற்றும் புல்வெளி ஆகியவற்றுடன், ஒன்றறக் கலந்துபட உதவுகிறது. பின்னதாகக் கூறப்பட்ட இரண்டும் சுவாரசியமான எடுத்துக்காட்டுகள். இவற்றின் நிறம் அவற்றின் சுற்றுச் சூழலுடன் ஒத்துப் போகாததைப் போல துவக்கத்தில் பார்வைக்குப் புலனாகக் கூடும். ஆனால், புலியின் இரைகள் ஓரளவிற்கு வண்ணக்குருடுகள். அவற்றால் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்தறிய இயலாது. வரிக்குதிரையைக் கொன்றுண்ணும் பிரதான மிருகமான சிங்கம் போன்றவையும் வண்ணக்குருடுகளே. வரிக்குதிரைகளைப் பொறுத்த வரையில், அவற்றின் வரிக்கோடுகள் மிகச் சிறப்பாகக் கலந்து விடுவதால், அவற்றின் ஒரு கூட்டம் ஒரு பெரும் நிலப்பரப்பு போல காணப்படுமே அன்றி, ஒரு சிங்கத்தால் தனிப்பட்ட ஒரு வரிக்குதிரையை வேட்டையாடித் தனக்கு இரையாக்கிக் கொள்ள இயலாது. வரிமீன் இனங்களும் இதே உத்தியைக் கையாளுகின்றன.
பறவைகளில், கனடிய வாத்துக்களின் "முகவாய்க்கட்டு" உயரமான புல்வெளிகளில் அவை, பறவையின் தலைகள் போல் காணப்படாது, குச்சிகள் போலத் தோற்றமளிக்க உதவுகின்றன.
விலங்குகள் தங்களது சூழலுடன் கலந்துபடுவதற்கோ அல்லது தங்களது உருவத்தை மறைத்துக் கொள்வதற்கோ, இயற்கையில் அழுத்தமான பரிணாமக் காரணங்கள் உள்ளன. இரையாகும் விலங்குகள் தங்களது கொன்றுண்ணிகளைத் தவிர்க்கவோ அல்லது கொன்றுண்ணிகள் தங்களது இரை மீது பதுங்கிப் பாயவோ இவை தேவைப்படுகின்றன.
இந்தத் தேவைகளுக்காக விலங்குகள் இயற்கையான உருமறைப்பினை மேற்கொள்கின்றன.
இதனைச் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. ஒன்று ஒரு விலங்கு தனது சூழலுடன் கலந்துபடுவதாகும்; மற்றொன்று, ஒரு விலங்கு சுவாரசியமற்ற அல்லது ஆபத்தானதாகக் காட்சியளிக்கும் வேறொன்றாகத் தன்னை உருமாற்றிக் கொள்வது.
இவ்வாறு விலங்குகள் செய்து கொள்ளும் உருமறைப்பு மற்றும் புலனுக்கெட்டாத நிறமாக்கத் தன்மைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து இரையாக்கிக் கொள்ளும் மிருகங்களின் புலனுணர்வும் பரிணாம வளர்ச்சியுடன் இணைந்தே வளர்ந்துள்ளது. குறிப்பிட்ட கொன்றுண்ணி-இரை ஜோடிகளில் பல விதங்களிலான புலனுக்கெட்டாத நிறமாக்கங்களும், புலனுணர்வுத் திறன்களும் காணப்படும்.
இவ்வாறான விலங்குகளில் சில இயற்கை இயக்கத்தையும் ஒற்றியெடுக்கின்றன. உதாரணமாக, காற்றில் ஒரு இலையைக் குறிப்பிடலாம். இதனை புலனுக்கெட்டாத நடத்தை அல்லது பழக்கத்திற்கான ஆதரவு எனக் குறிப்பிடலாம். இதர விலங்குகள் தங்களை மறைத்துக்கொள்ள இயற்கைத் தனிமங்களை தங்களிடம் ஈர்க்கின்றன. சில விலங்குகள் வாசம் மூலமாக பதிலிறுக்கின்றன. மாறும் சூழல்களில் நிறம் மாறுகின்றன. இது, எர்மைன் மற்றும் பனிச்செருப்பு குழிமுயல் ஆகியவற்றைப் போல எப்போதாவது உருமாற்றிக் கொள்வதாக் இருக்கலாம்; அல்லது (செஃபலோபாட் இன விலங்குகளைப் போல) தங்களது குரமட்டோஃபோர் என்னும் நிறமியணுக்களை மாற்றிக் கொள்ளலாம் சில விலங்குகள், குறிப்பாக நீர்ச் சூழல்களில், கொன்றுண்ணிகளை ஈர்க்கும் தன்மை கொண்ட வாசங்களையும் உருமறைக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றன.[சான்று தேவை] மந்தையாகச் செல்லும் சில விலங்குகள் இதையொத்த உத்தியைக் கையாளுகின்றன. இதனால், தனிப்பட்டதான ஒரு விலங்கைக் கண்டறிவது கடினமாகிறது.
இதற்கான எடுத்துக்காட்டுகள் வரிக்குதிரைகளின் மீதுள்ள வரிகள் மற்றும் மீன் மீதுள்ள பிரதிபலிக்கும் தன்மையிலான செதில்கள்.
ஆரம்ப காலத்து மேற்கத்திய நாகரிக அடிப்படையிலான போர்முறைகளில் உருமறைப்பு பரவலான அளவில் பயன்பாடாகவில்லை. 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டில் இராணுவங்கள் பிரகாசமான வண்ணங்களையும், எடுப்பான தோற்றம் கொண்ட வடிவங்களையுமே சீருடைகளில் பயன்படுத்தி வந்தன. இவை எதிரியை அச்சுறுத்தவும், புதிய வீரர்களைக் கவர்ந்திழுக்கவும், அணியின் ஒருமையை அதிகரிக்கவும் அல்லது, புகையற்ற துப்பாக்கி இரவை கண்டுபிடிப்பதற்கு முன்னர் போர்க்களங்களில் நிலவி வந்த, போர்ப் பனிமூட்ட வேளையில் அணியை அடையாளம் காணவுமே பெரும்பாலும் பயன்பட்டன. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாகெர் துப்பாக்கி வீரர்களே முதன் முறையாக மங்கலான பச்சை அல்லது சாம்பல் வண்ணச் சாயங்களைப் பயன்படுத்தத் துவங்கினர். பெரும் படைகள், பிரகாசமான வண்ணங்களையே, அவ்வாறான பயன்பாடு சரியானதல்ல என்று தாங்கள் உணர்ந்து கொள்ளும் வரையிலும், பயன்படுத்தி வந்தன. 1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்த பிரித்தானிய வீரர்கள் தங்களிடையே நிகழ்ந்த மரணங்களினால், தங்களது பளீரென ஒளிவீசும் வெண்ணிறச் சீருடைகளை மையமான ஒரு வண்ணத்திற்கு மாற்றலாயினர். துவக்கத்தில் சகதி போன்றிருந்த, (உருது மொழியில் தூசு என்னும் பொருள்படுவதான), காக்கி எனப்பட்ட சாயத்தைப் பயன்படுத்தலாயினர். இது தாற்காலிகமான ஒரு ஏற்பாடாகத்தான் இருந்தது. சிவப்பு அல்லது வெள்ளைச் சீருடைக்கே ராணுவம் திரும்பியது. இந்திய சேவைக்கு காக்கி சீருடையே பொதுவானதாக 1880ஆம் ஆண்டுகளில் நிலைபெறும்வரை, இந்நிலையே நீடித்தது. 1902ஆம் ஆண்டு இரண்டாம் போயர் போர் வரையிலும் "சொந்த மண் சேவை" (அதாவது வெப்பமற்ற நாடுகளில்) தள சீருடைகள் காக்கி நிறத்தின் ஒரு அடர்த்தியான சாயத்தைப் பயன்படுத்தி வந்தன. ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற பிற நாட்டு ராணுவங்கள் காக்கியை அல்லது தமது சூழலுக்குப் பொருந்துவதாக சாம்பல் வண்ணம், நீலப்பழுப்பு அல்லது மற்ற நிறங்களைப் பயன்படுத்தத் துவங்கின
உருமறைப்பாக வலைவிரித்தல், இயற்கைப் பொருட்கள், குந்தகம் உண்டாக்கும் வண்ணக்கோலங்கள் மற்றும் பிரத்தியேக அகச்சிவப்பு, வெப்ப மற்றும் கதிரலைக்கும்பா இயல்புகளும் இராணுவ வாகனங்கள், கப்பல்கள், வானூர்திகள், நிலையாக்கங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றில் பயன்படுகின்றன. இதற்குக் குறிப்பான ஒரு எடுத்துக்காட்டு பளபளக்கும் உருமறைப்பாகும். இது முதலாம் உலகப்போரின்போது கப்பல்களில் பயன்படலானது. துப்பாக்கி வீரர்களும் அவர்களது துணையான இலக்கு கண்டுபிடிப்பாளர்களும் கில்லி சீருடை என்பதை அணிந்து உருமறைப்பு என்பதனை மேலும் ஒரு உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றனர். இவர்கள் வண்ணங்களின் சேர்க்கை மட்டும் அல்லது, மரக் குச்சிகள், இலைகள் மற்றும் தழைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இதனால் மனித உருத்தோற்றம் என்பதைத் தென்படாதவாறு உருக்குலைக்க இயன்றது. தங்களது சீருடைகளில் அச்சிடப்பட்ட நிறங்களுக்குப் பதிலாகத் தங்களது அருகிலுள்ள சூழலில் உள்ள நிறங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்தலாயினர். இதன் மூலம், நேரடியாகத் தொலை நோக்காடி அல்லது வானூர்தி வழியே பார்த்தாலும் தென்படாது இருக்க முடிந்தது.
வேட்டைக்காரர்கள் பெரும்பாலும் தங்களது வேட்டை விளையாட்டுக்கு ஏற்றதாகத் தைக்கப்பட்ட உருமறைப்பு உடைகளை அணிகிறார்கள். இதற்கு மிகச் சரியான ஒரு எடுத்துக்காட்டு பிரகாசமான ஆரஞ்சு வண்ண உடை. இது மனிதர்களுக்கு எடுப்பாகத் தென்படினும், மான் போன்ற பெரும் விலங்குகளில் பெரும்பான்மையானவை இரு வண்ணங்களுக்கு மேலாக பிரித்தறிய இயலாதவை என்பதால், அவற்றிற்கு ஆரஞ்சு வண்ணம் மங்கலான நிறமாகவே தென்படும் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
இதற்கு மாறாக, துணிகள் பளீரெனத் தென்படுவதற்காக சலவைச் சவுக்காரங்களில் பொதுவாகப் பயன்படும் புறஊதா நிறமானது பல வேட்டை விலங்குகளுக்குத் தெளிவாகத் தென்படும் நிறமாகும். மனிதக் கண்களுக்கு மங்கலாகத் தோன்றும் இந்த வண்ணம், பின்புலத்திற்கு மிகுந்த அளவில் மாறுபாடாக இருக்கும் காரணத்தால், புற-ஊதா மிகுவுணர்வு உள்ள மிருகங்களுக்கு மிக எளிதில் இது தென்படுகிறது.[1]
வேட்டை உருமறைப்பில் பல வகைகள் உள்ளன. வேட்டைக்காரர் எந்தப் பகுதியில் வேட்டையாடச் செல்கிறார் என்பதைப் பொறுத்தே அவை அமையும். இவை பெரும் பாலூட்டிகளை வேட்டையாடுபவர்களுக்கு பாசிக் கருவாலி வண்ணக் கோலம் துவங்கி சதாவல்லி வண்ணக் கோலம் வரை மாறுபடும். கங்கணம் என்னும் நீர்ப்பறவையை வேட்டையாடுபவர்கள் சதுவற்புற்களைப் பயன்படுத்தலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.