Remove ads
From Wikipedia, the free encyclopedia
உம்பெர்த்தோ எக்கோ (Umberto Eco, சனவரி 5, 1932 - பெப்ரவரி 19, 2016) ஓர் இத்தாலிய குறியியலாளர், ஐரோப்பிய இடைக்கால ஆர்வலர், மெய்யியலாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர்.
உம்பெர்த்தோ எக்கோ Umberto Eco | |
---|---|
பிறப்பு | அலெசாந்திரியா, பியத்மாந்து, இத்தாலி | 5 சனவரி 1932
இறப்பு | 19 பெப்ரவரி 2016 84) [1] | (அகவை
காலம் | 20ம் / 21ம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்தைய மெய்யியல் |
பள்ளி | குறியியல் |
முக்கிய ஆர்வங்கள் | வாசகர் மறுமொழி விமர்சனம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | திறந்த படைப்பு ("opera aperta") |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
கையொப்பம் |
இத்தாலியின் தூரின் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய இடைக்கால மெய்யியல் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற எக்கோ, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் (1956-64) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இத்தாலியின் தேசிய அலைபரப்பு ஊடக நிறுவனத்தில் பண்பாட்டு ஆசிரியராகவும், இத்தாலிய இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் மிலான் நகரின் போம்பியானி பதிப்பகத்தின் அபுனைவு (non-fiction) பிரிவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் தான் குறியியல் பற்றி சிந்திக்கத் தொட்ங்கினார். இத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஹார்வார்ட் உட்பட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள எக்கோ தற்போது போலோன்யா பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
1956ல் அவரது முதல் புத்தகம் இல் பிராப்ளேமா எஸ்தெடிகோ இன் சான் தொமாஸ்கோ (Il problema estetico in San Tommaso) வெளியானது. குறியியல் பற்றியும் இடைக்காலத்தைப் பற்றியும் பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எக்கோ எழுதியிருந்தாலும், 1980ல் வெளியான இல் நொம் டெல்ல ரோசா (Il nome della rosa, ஆங்கிலம்: The Name of the Rose) என்ற புதினமே அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்தது. வரலாற்றுப் புனைவு, இடைக்கால மெய்யியல், இறையியல், துப்பறிவுப் புனைவு என பல பாணிகளின் கூறுகளைக் கொண்டிருக்கும் இப்புதினம், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வெற்றிக்குப் பின்னர் எக்கோ உலகெங்கும் அறியப்படுகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.