From Wikipedia, the free encyclopedia
ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
16ஆம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானி (Hussein El Gariani) யின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா (Abd Akader Bodia) இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
1911- ஒக்டோபர் மாதம் இத்தாலி- துருக்கி யுத்த காலம் அது. அட்மிரல் லுயிஜி பராவெல்லி (Luigi Faravelli) யின் தலைமையில் சென்ற இத்தாலிய கடற்படை அணி லிபிய கரையோர கிராமத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள். இல்லையேல் திரிப்போலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்.” என அட்மிரல் பராவெல்லி பொறி தெறிக்க முழங்கினார்.
லிபியர்கள் சரணடையவில்லை. மாறாக, தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு ஓடி மறைந்தனர். விளைவு 3 நாட்களாக முசோலினியின் படை திரிப்போலியின் மீது குண்டு மாரி பொழிந்தது. திரிப்போலிடேனியன்ஸ் (Tripolitanians) என்ற பெயரில் ஒரு புது பிரகடனத்தை இத்தாலி வெளியிட்டது.
இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினி (Benito Mussolini) படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
ஒமர் முக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசான். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
ஒமர் முக்தார் கைது செய்யபட்டு தண்டனையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களைக் கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களைச் சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.