உபுண்டு வெளியீட்டுப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
உபுண்டு இயக்குதளமானது, ஆண்டிற்கு இருமுறையாக கனோனிக்கல் நிறுவனம் வெளியிடுகிறது. வெளியிடும் பதிப்பின் பெயரில் (எ. கா. - உபுண்டு 14.04) உபுண்டு என்ற சொல்லிற்கு அடுத்து வரும் ஈரிலக்க எண் என்பது ஆண்டினைக் குறிக்கும். அதற்கு அடுத்து ஒரு நிறுத்தற்புள்ளியும் அதனை அடுத்து மற்றொரு ஈரிலக்க எண்ணும் அமைந்திருக்கும். இந்த கடை எண்கள், அந்த ஆண்டிற்குரிய மாதங்களைக் குறிக்கும். ஏப்ரல் மாதம் எனில், 04 எனவும், அக்டோபர் மாதம் எனில், 10 எனவும் அமைந்துவரும்.[1] வரவிருக்கும் எதிர்கால வெளியீடுகளைக் குறிக்கும் எண்கள், தவிர்க்க இயலாதக் காரணங்களால், வெளியிடும் காலம் மாறி வந்தால், அவைகள் அறிவிப்புடன் மாறி வரலாம்.[2]
பெரும்பாலும், குனோம் வெளியீட்டிற்குப் பிறகு, ஒரு மாதம் கழித்து வெளியிடப்படும். இதனால் உபுண்டுவின் பதிப்பும், மேம்படுத்தப்பட்ட குனோமுடன் வரும். இந்த காலத்தோடு, எக்சு ஆர்க் வழங்கி (X.Org Server) வெளியிடப்படும் காலத்திற்குப் பிறகே, உபுண்டுவின் புதிய பதிப்பு வெளியிடப்படும்.[3][4][5]
நான்கு வெளியீடுகளுக்கு ஒருமுறை, ஐந்தாண்டு கால இற்றைப்படுத்துதல் ஆதரவோடு (LTS=Long Term Support), உபுண்டு பதிப்பும் வெளியிடப்படுகிறது. 6.06, 8.04, 10.04, 12.04, 14.04 ஆகிய உபுண்டு பதிப்புகள், நீண்ட கால ஆதரவுடன் வெளியிடப் பட்டுள்ளன.[6] பிற பதிப்புகள் 18மாதங்களுக்கு ஆதரவு தரப்படுகிறது. இக்காலமானது 9மாதங்களாக, உபுண்டு 13.04 பதிப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.[7]
பெயரிடல் மரபு
உபுண்டு வெளியீடுகளும் குறிப்பெயர்களின் அடிப்படையைப் பின்பற்றுகின்றன. இதன் பெயரிடல் மரபில் இருசொற்கள் அமைந்திருக்கும். அதில் முதற்சொல் உரிச்சொல்லாக அமைந்து,[8] அதற்கு அடுத்து ஒரு விலங்கினத்தின் பெயர் அமைந்திருக்கும். முதல் இரண்டு வெளியீடுகளைத் தவிர, அனைத்தும் இந்த இருசொல் ஆக்கத்தின் அடிப்படையிலும், அகர வரிசையின் அடிப்படையிலுமே அமைந்துள்ளன. இதன் முதல் எழுத்துக்களை வைத்தே ஒரு பதிப்பின் காலத்தை உணர முடியும். (எ.கா) பதிப்பு 12.04 என்பது Precise Pangolin, அதற்கு பிறகு வந்த பதிப்பு 14.04 Trusty Tahr
வெளியீடுகளின் அட்டவணை
அட்டவணையில் முதலாவதாக உள்ள பதிப்பு எண்ணை அழுத்தினால், அது அதற்குரிய விரிவான கட்டுரைப்பகுதிக்கு செல்லுமாறு கட்டகப் படுத்தப்பட்டுள்ளது.
|
வெளியீடுகளின் காலக்கோடு

வெளியீடுகளின் வரலாறு
உபுண்டு 4.10

உபுண்டு 4.10 (Warty Warthog), கனோனிக்கல் நிறுவனத்தின் முதல் வெளியீடாக, டெபியன் வகையை அடிப்படையாகக் கொண்டு, 20 அக்டோபர் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்பொழுது, ஒவ்வொரு 6மாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பும், 18 மாதங்களுக்கு, அதன் உள்கட்டகநிரல்களுக்கு மேம்படுத்தும் ஆதரவும் தர உறுதிபடுத்தப்பட்டது.[22] இவ்வெளியீட்டின் ஆதரவு காலம், 30 ஏப்ரல் 2006 ஆம் நாளோடு முடிவுற்றது.[23] இப்பதிவு இலவசமாக பதிவிறக்கக்கூடிய ( Canonical's ShipIt )வகையில் தரப்பட்டது.[24] மேலும், குறுவட்டு வடிவில் அஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டது.[25]
உபுண்டு 5.04

உபுண்டு 5.10

உபுண்டு 6.06

உபுண்டு 6.10

உபுண்டு 7.04

உபுண்டு 7.10

உபுண்டு 8.04

உபுண்டு 8.10

உபுண்டு 9.04

உபுண்டு 9.10

உபுண்டு 10.04

உபுண்டு 10.10

உபுண்டு 11.04

உபுண்டு 11.10

உபுண்டு 12.04

உபுண்டு 12.10

உபுண்டு 13.04

உபுண்டு 13.10
உபுண்டு 14.04

இதையும் காணவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.