உதல்குரி மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
உதல்குரி மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் உதல்குரி நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 1852.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] மானஸ் வனவிலங்கு காப்பகத்தின் பகுதி இந்த மாவட்டத்தின் வரையறைக்குள் உள்ளது.
உதல்குரி மாவட்டம் Udalguri district | |
---|---|
மாவட்டம் | |
Map of Udalguri District | |
நாடு | இந்தியா |
State | அசாம் |
தலைமையகம் | உதல்குரி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | udalguri.gov.in |
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 832 769 மக்கள் வாழ்ந்தனர்.[2] இங்கு வாழும் மக்களில் 66.6% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 966 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] இங்கு அசாமிய மக்கள், போடோ மக்கள், கோச் மக்கள், ரபா மக்கள், சந்தாலி மக்கள், மார்வாரிகள், வங்காளிகள் ஆகியோர் வாழ்கின்றனர்.
இந்த மாவட்டத்தை இரண்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். உதல்குரி, பேர்காவ் ஆகியன. இதை மேலும் 9 வருவாய் வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.