கணக் கோட்பாட்டில் ஒரு கணத்தின் உறுப்புகள் யாவும் மற்றொரு கணத்தின் உறுப்புகளாக அமைந்திருந்தா From Wikipedia, the free encyclopedia
கணிதத்தில், குறிப்பாகக் கணக் கோட்பாட்டில், A என்னும் ஒரு கணத்தின் உறுப்புகள் அனைத்தும் B என்னும் இன்னொரு கணத்தில் அமைந்திருந்தால், A கணமானது B இன்உட்கணம் (Subset) என்று வழங்கப்படும். சமானமாக, B கணமானது A கணத்தின் மேற்கணம் அல்லது மிகை கணம் (superset) எனப்படும். A , B ஆகிய இரு கணங்களும் ஒன்றிடனொன்று ஒன்றலாம்.
எனில், [1]
உட்கண உறவானது கணங்களின் மீது ஒரு பகுதி வரிசையை (partial order) வரையறுக்கும். உட்கணங்களின் இயற்கணிதமானது, உட்கண உறவை ”உள்ளடக்கலாகக்” (inclusion) கருதும் பூலிய இயற்கணிதத்தை உருவாக்கும்.
பொதுவாகக் கணம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பைக் குறிக்கும். உட்கணமும் ஒரு கணத்தையே குறிக்கும். B என்பது ஒரு வெற்றற்ற கணம் என்க. அதில் A என்பது B யின் உட்கணம் எனில், A யில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் B யின் உறுப்பாகும். மாறாக, B ஆனது A யின் மிகைக் கணம் அல்லது மேற்கணம் எனவும் அழைக்கலாம்.
இதன் குறியீடு:
குறியீடு:
வெற்றுக் கணம் ( அல்லது ), உறுப்புகளற்ற கணம் என்பதால் அது எந்தவொரு கணம் X க்கும் உட்கணமாக இருக்கும்.
உட்கணம் மற்றும் மிகைக்கணம் இரண்டையும் குறிப்பதற்குச் சில நூலாசிரியர்கள் ⊊ and ⊋ என்பவற்றுக்குப் பதில் ⊂ , ⊃ என்ற குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.[2] எடுத்துக்காட்டாக, இவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கணம் A க்கும், A ⊂ A.
வேறுசிலர் தகு உட்கணம், தகு மிகைக்கணம் இரண்டையும் குறிப்பதற்கு ⊊ , ⊋ குறிகளுக்குப் பதில் முறையே ⊂ , ⊃ இரண்டையும் பயன்படுத்துகின்றனர்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.