உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு (Valikamam South Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. உடுவில், சுன்னாகம், சங்குவேலி, கந்தரோடை, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை, இணுவில், தாவடி ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும் அமைத்துள்ளன.
இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்[1].
வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம், உடுவில் கிழக்கு, சுன்னாகம், இலங்கை
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.