கயானா நாட்டைச் சேர்ந்த அமெரிக்க ஆங்கில புதின எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
ஈ. ஆர். பிரைத்வெய்ட் ( Eustace Edward Ricardo Braithwaite 27 சூன் 1912-திசம்பர் 12 2016) என்பவர் கயானா நாட்டைச் சேர்ந்த அமெரிக்க ஆங்கில புதின எழுத்தாளர், நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் தூதர் ஆவார்.[1]
டு சார் வித் லவ் என்ற இவர் எழுதிய நூல் 1959 இல் வெளிவந்து பெரும் புகழை இவருக்கு ஈட்டிக் கொடுத்தது.[2] இக்கதை திரைப் படமாகவும் ஆக்கப்பட்டது. இவருடைய புதினங்களும் சிறுகதைகளும் இனங்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் கறுப்பின மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் பிற சமூக நிலைமைகள் ஆகியன குறித்து சித்தரிப்பவன ஆகும்.
கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் வேலை கிடைப்பதும் வீடு கிடைப்பதும் வாழ்வின் தொடக்கத்தில் பிரைத் வெயிட்டுக்குக் கடினமாக இருந்தது.
1973 ஆம் ஆண்டில் இவருடைய நூலுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தென்னாப்பிரிக்க அரசு நீக்கியது. அதன் பின்னர் இவர் தென்னாப்பிரிக்காவில் 6 வாரங்கள் சுற்றுப் பயணம் செய்தார். அந்தச் சுற்றுப்பயண அனுபவங்களை எழுதி நூலாக வெளியிட்டார்.
நியூயார்க்கு பல்கலைக்கழகம், ஹோவார்டு பல்கலைக்கழகம், மான்சேஸ்ட்டர் கம்யூனிட்டி கல்லூரி ஆகிய நிறுவனங்களில் பேராசிரியராக இருந்தார். 1960 ஆண்டுகளில் ஐக்கிய நாட்டு அவையில் கயானா நாட்டின் தூதராக இருந்தார். வெனிசுலா நாட்டிலும் தூதராக இருந்தார்.
பிரைத் வெயிட் நூறாண்டுகள் நிறைவுற்றபோது கயானா நாட்டுக்குச் சென்றார். அப்போது இவருக்கு அந்நாட்டு அரசுத் தலைவர் விருது அளித்துச் சிறப்பித்தார். இவர் அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் வசித்து வந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.