தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Erode Arts College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு பகுதியிலுள்ள இரங்கம்பாளையம், சென்னிமலை சாலையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியும் டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தவை ஆகும்.
உருவாக்கம் | 1971 |
---|---|
முதல்வர் | வெங்கடாச்சலம் |
கல்வி பணியாளர் | 250 |
மாணவர்கள் | 4000 |
அமைவிடம் | , , 11.301477°N 77.698132°E |
வளாகம் | 15 ஏக்கர்கள் (0.06 km2) |
அறக்கட்ளை | முதலியார் கல்வி அறக்கட்டளை |
சேர்ப்பு | பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் |
இணையதளம் | www |
ஈரோடு கலைக் கல்லூரியானது 'என்ஏஏசி'யிடம் 'ஏ' தரச்சான்று அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற ஒரு தன்னாட்சி இணைக் கல்வி நிறுவனமாகும். இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.