Remove ads
From Wikipedia, the free encyclopedia
இலியா மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov, அல்லது Élie Metchnikoff, உருசியம்: Илья́ Ильи́ч Ме́чников, (மே 16 [யூ.நா. மே 3] 1845 – 16 சூலை 1916) என்பவர் உருசிய விலங்கியலாளர் ஆவார். இவர் நோய் எதிர்ப்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[1] மூப்பியல் (gerontology) என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.[2][3]
இலியா இலீச் மெச்னிகோவ் Ilya Ilyich Mechnikov | |
---|---|
1908 இல் இலியா மெச்னிக்கோவ் | |
பிறப்பு | இலியா இலீச் மெச்னிகோவ் மே 16 [யூ.நா. மே 3] 1845 இவானொவ்கா, கார்க்கோவ், உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்) |
இறப்பு | 16 சூலை 1916 71) பாரிஸ், பிரான்சு | (அகவை
தேசியம் | உருசியர் |
துறை |
|
பணியிடங்கள் | ஒடேசா பல்கலைக்கழகம் புனித பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம் பாசுச்சர் கல்விக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது | தின்குழியமை |
விருதுகள் | கோப்லி விருது (1906) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1908) ஆல்பர்ட் விருது (1916) |
உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908 இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார்.[4] இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.