From Wikipedia, the free encyclopedia
இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு (Lithium hexafluorophosphate ) என்பது LiPF6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தூளாக இது காணப்படுகிறது. முனைவுக் கரைப்பான் மற்றும் நீர் தவிர்த்த ஏனைய கனிம வேதியியல் கரைப்பான்கள் ஆகியவற்றில் இதன் கரைதிறன் காரணமாக, வணிக முறையிலான இரண்டாம் நிலை மின்கலன்களில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[1]. குறிப்பாக புரோப்பைலீன் கார்பனேட்டு மற்றும் டைமெத்தாக்சியீத்தேனில் உள்ள இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு இலித்தியம் வகை மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இலித்தியம் உலோகம் போன்ற வலிமையான ஒடுக்கும் முகவர்களுடன் எக்சாபுளோரோ பாசுப்பேட்டு எதிர்மின் அயனி மந்தத்தன்மையுடன் இருப்பதும் இம்முறையில் வெளிப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
21324-40-3 | |
ChemSpider | 146939 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23688915 |
| |
பண்புகள் | |
LiPF6 | |
வாய்ப்பாட்டு எடை | 151.905 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான தூள் |
அடர்த்தி | 1.5 கி/செ.மீ3 |
உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) |
கரையும் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
P280, P310, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் டெட்ராபுளோரோபோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு அமோனியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெப்பச்சூழலில் இவ்வுப்பு நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் 200° செல்சியசு வெப்பநிலையில் 50% எடையை இழக்கிறது. 70° செல்சியசு வெப்பநிலையில் பின்வருமாறு நீராற்பகுப்பு அடைகிறது.
Li+ அயனிகளின் இலூயிசு அமிலத்தன்மையால் LiPF6 சேர்மமும் மூவிணைய ஆல்ககால்களின் டெட்ராயைதரோபைரனேற்ற வினையில் வினையூக்கியாகச் செயல்படுகிறது[2].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.