இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி

இந்தியாவின் மைலாடியிலுள்ள தேவாலயம் From Wikipedia, the free encyclopedia

இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி

ரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் (Ringeltaube Vethamonikam Memorial Church) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மைலாடி பேரூராட்சியில் அமைந்துள்ளது.[1][2] தென்னிந்திய திருச்சபை - கன்னியாகுமரி மறைமாவட்டத்திற்கு[தெளிவுபடுத்துக] தலைமைப் பேராலயமாக இது செயல்படுகிறது.[3]

விரைவான உண்மைகள் பெயர், தற்போதைய வசிப்பிடம் ...
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
தேவாலயம்
Thumb
பெயர்ரிங்கல் தௌபே-வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
தற்போதைய வசிப்பிடம்மைலாடி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு விபரம்
வலைப் பக்கம்www.csimylaudy.com
மூடு

1996 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் நாளன்று மைலாடி தேவாலயம் "சேகர தேவாலயம்'' என தரம் உயர்த்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாளன்று நடைபெற்ற 200 ஆவது (இரு நூற்றாண்டு விழா) வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே வேதமாணிக்கம் நினைவு நாளில், மைலாடி தேவாலயம் தென்னிந்திய திருச்சபை - கன்னியாகுமரி மறைமாவட்டம் மற்றும் தென் கேரளா மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாக (cathedral) தென்னிந்திய திருச்சபை தலைமை ஆயர் ஜான் கிளாட்ஸ்டனால் அறிவிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது.[4]

ஆகஸ்ட் 08, 2019 அன்று மைலாடி மக்கள் ஜெர்மன் மிஷனரி[தெளிவுபடுத்துக] வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே அவர்களின் 250ஆவது பிறந்தநாளை கொண்டாடினர்.

ஆண்டு தோறும், ஏப்ரல் 25 ஆம் தேதி முழு கன்னியாகுமரி மறைமாவட்டமும், தென் கேரளா மறைமாவட்டமும் இனைத்து மயிலாடி தேவாலயத்தில் வைத்து வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே - வேதமாணிக்கம் நினைவு தின சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்கிறது.

தற்போது, மைலாடி தேவாலயம் வளர்ந்து ​​மூன்று மறைமாவட்ட திருச்சபைக்கு தலைமைப் பேராலயமாக (கன்னியாகுமரி மறைமாவட்டம், தெற்கு கேரள மறைமாவட்டம், கொல்லம்-கொட்டாரக்கரா மறைமாவட்டம்) உள்ளது.

வரலாறு

18 ஆம் நூற்றாண்டில், கோல்ஃப் ஐயரின் வேண்டுகோளின் பேரில், ஜெர்மன் மிஷனரி[தெளிவுபடுத்துக] வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே திருவிதாங்கூருக்கு வந்தார். தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவர் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகர் ஆதரவால் மைலாடியில் தங்கினார். [5] பத்து ஆண்டு காலத்தில், வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே தனது பணியை உருவாக்குவதில் வெற்றி பெற்றார். முதல் தேவாலயம் செப்டம்பர் 1809 இல் மைலாடியில் கட்டப்பட்டது. மைலாடியில் ஒரு பெரிய தேவாலயம் கட்டப்பட்ட பிறகு. பல தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் பல ஊர்களில் நிறுவப்பட்டன.[6] பள்ளிகளில் கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களும் கல்வி கற்று கல்வியறிவு பெற்றுள்ளனர். 1821 இல் அவரது பணியால் ஒரு அச்சு இயந்திரம் & அச்சகம் தொடங்கப்பட்டது. மருத்துவப் பிரிவு 1838 இல் நிறுவப்பட்டது.[5]

தோற்றம்

மே 1809 இல், வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே தென் திருவிதாங்கூர் முதல் சீர்திருத்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். மைலாடி மக்கள் பகலில் தங்கள் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, இரவில் தேவாலய கட்டிடத்திற்காக வேலை செய்தனர். தேவாலயப் பணிகள் 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, செப்டம்பரில் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது. அன்று சிலர் வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே போதகரிடம் ஞானஸ்நானம் பெற்றார்கள். தேவாலயத்தின் நீளம் 40 அடி. அகலம் 12 அடியாக இருந்தது. இந்த தேவாலயம் தற்போதைய தேவாலயம் உள்ள இடத்தில் அமைந்துள்ளது.

தென் திருவிதாங்கூரில் முதல் ஆங்கில வழி பள்ளி & லண்டன் மிஷன் சொசைட்டி (LMS)

அதே ஆண்டில் (1809), தென் திருவிதாங்கூர் இன் முதல் ஆங்கிலப் பள்ளி தேவாலயத்திற்கு கிழக்கே சுமார் 700 அடி தொலைவில் வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே நிறுவினார்.[7]

தென் திருவிதாங்கூர் இன் லண்டன் மிஷனரி சொசைட்டி தலைமையகமும் மைலாடி இல் இருந்தது. [8] வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே என்பவரால் நிறுவப்பட்டது.

1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது.

[9]

மைலாடி தேவாலயத்தின் வளர்ச்சி

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், தேவாலயம் விரிவுபடுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இட நெருக்கடி காரணமாக, தேவாலயம் முற்றிலும் இடித்து, அதே இடத்தில் புதிய தேவாலயம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றிய ஆயர் இ.இ.ஞானதாசனால் (பேராயர் ஐ.ஆர்.எச். ஞானதாசன் தந்தை) திருச்சபையின் பின்புறம் சிலுவை வடிவில் விரிவுபடுத்தப்பட்டது. 17 டிசம்பர் 1932 அன்று மைலாடி தேவாலய போதகர் ஜான் .ஏ. ஜேக்கப் ஆசீர்வதித்தார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இடப்பற்றாக்குறை காரணமாக, புதிய தேவாலயம் கட்ட மக்கள் முடிவு செய்தனர். மே 13, 1966 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, பேராயர் ஐ.ஆர்.எச். ஞானதாசன் புதிய சிலுவை வடிவ தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். புதிய சிலுவை வடிவ தேவாலயம் 120 அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்டது. தேவாலயத்தின் ஒவ்வொரு கையும் 33 அடி நீளமும் 19 அடி அகலமும் கொண்டது. பலரின் ஆதரவுடனும் மைலாடி மக்களின் உழைப்புடனும் 25 ஆண்டுகளில் தேவாலயம் கட்டப்பட்டது. இப்போதிருக்கும் தேவாலயம், 27 செப்டம்பர் 1991 வெள்ளிக்கிழமையன்று பேராயர் ஜி. கிறிஸ்துதாசால் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.