Remove ads
தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
இராசேந்திர சோழன் (Rajendra Chozhan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அஷ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் எழுதிவந்தார். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதினார். மார்க்சியப் பார்வை கொண்ட இவர்[1] பின்னர் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப்பார்வை கொண்டவராக மாறினார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக இயங்கினார்.[2] [3]
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இராசேந்திரசோழன் தென்னாற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டையில் 1945 திசம்பர் 17 அன்று பிறந்தார்.[4][5] பெற்றோர் இருவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.[5] பள்ளி ஆசிரியராக இருபத்து ஒரு ஆண்டுகள் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் வசித்து வந்தார். பாதல் சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்று, தமிழ்நாடு முழுவதும் பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார்.[4] அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் பல நாடகங்களை எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புனைவிலக்கியங்கள் மட்டுமின்றி, மார்க்சியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பின்நவீனத்துவம் போன்றவற்றில் முக்கியமான அரசியல் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
1970 முதல் 1985 வரை மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கலை செயற்பாடுகளில் ஈடுபடுத்திய இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.[4] தொடர்ந்து, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறினார்.[4] 1985 முதல் 2005 வரை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியில் வினையாற்றினார். பின்னர் தமிழ்த்தேச மார்க்சியக் கட்சியைத் தொடங்கினார். [6]
'உதயம்', 'பிரச்சனை', 'மண்மொழி' ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
சிறிது காலமாக உடல்நலமின்றி இருந்த நிலையில், 2024 மார்ச் 1 அதிகாலையில் காலமானார்.[4] இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.[5]
இராசேந்திரசோழன் பின்வரும் 79 சிறுகதைகளை எழுதியிருக்கிறார்: (அகரவரிசையில்)
இக்கதைகளை (1) அரசியல் இயக்கப் பகடி அங்கதக் கதைகள் (1985-2011 காலப்பகுதியில் எழுதப்பட்டவை), (2) காமத்திளைப்புப் பாலியல் கதைகள் (உட்பிரிவு: அ. பாலியல் தொழிலாளி கதைகள், ஆ. இருபால் அத்துமீறல் கதைகள்), (3) நவீன - பின்நவீன யதார்த்தக்கூறுகள் என பேராசிரியர் வே. மு. பொதியவெற்பன் பகுக்கிறார்.[6] மேலும் அவற்றை (1) விமர்சன யதார்த்தவாதக் கதைகள், (2) இலக்கிய யதார்த்த கதைகள்
(அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் எழுதிய இராசேந்திரசோழன் எழுதிய 12 நாடகங்கள் "அஸ்வகோஷ் நாடகங்கள்" என்ற நூலாக வெளிவந்துள்ளன.)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.