இயக்குநர் பார்த்திபன் இயக்கிய தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
இரவின் நிழல் என்பது ஜுலை 15 இல் வெளியான இந்திய தமிழ் மொழி பரபரப்பூட்டும் அதிரடிச் சுயாதீனத் திரைப்படம் ஆகும். இதில் அகிரா புரொடக்க்ஷன்ஸ் மற்றும் பயோஸ்க்கோப் பிள்ம் புரேமர்ஸ் ஆகியப் பதாகையின் கீழே இரா. பார்த்திபன் தயாரித்து, எழுதி, துணைத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இதில் இராதாக்கிருஷ்ணன் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபா சங்கர், பிரியங்கா ருத் மற்றும் பிரிகிதா சாகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பன்னணி இசை ஏ. ஆர். ரகுமானால் இசையமைக்கப்பட்டு ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது. இப்படம் முதல் ஆசிய ஒற்றைப்பிடிப்புத் திரைப்படத்திற்காக ஆசியச் சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.[1] உலகின் முதல் நேரியிலற்ற ஒற்றைப்பிடிப்புத் திரைப்படமென்றும் முதல் ஆசிய ஒற்றைப்பிடிப்புத் திரைப்படமென்றும் பெருமிதம்கொள்ளப்பட்டது. தொகுப்பாளரின்றி படைக்கப்பட்ட முதல் ஆசியத் திரைப்படமெனவும் கருதப்படுகிறது. இத்திரைப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு முன்மொழிந்து அனுப்பப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றாகும்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இரவின் நிழல் | |
---|---|
இரவின் நிழல் சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். பார்த்திபன் |
தயாரிப்பு | கால்டுவேல் வேள்நம்பி அன்ஷு பிரபாகர் Dr. பின்ச்சி சிரீனிவாசன் பாலா சுவாமிநாதன் ரஞ்சித் தண்டபானி |
கதை | ஆர். பார்த்திபன் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | ஆர். பார்த்திபன் வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் பிரியங்கா ருத் பிரிகிதா சாகா ஆனந்த கிருஷ்ணன் |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஆ. வில்சன் |
கலையகம் | பையோஸ்கோப் பிள்ம் பிரேமர்ஸ் அகிரா பிள்ம் புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | வி கிரியேஷன்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படக்குழுவினர் தனிமையானச் சாலையில் இரவு வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதை குறிக்கும் வண்ணமமைந்த திரைப்படத்திலிருந்து குறுங் காணொளியை பிப்ரவரி 2, 2022 அன்று வெளியிட்டனர். மார்ச் 19, 2022 அன்று மூத்த இயக்குநர் மணி ரத்னம் முதற்பார்வை சுவரொட்டியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். பிறகு மெட்ரால் டாக்கீஸும் டுவிட்டரில் வெளியிடுகின்றனர்.[2][3] திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தூண்டோட்டம்(teaser) யூடியூபில் மே நாளை முன்னிட்டு மே 1, 2022 அன்று வெளியானது.[4]
திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் வெற்றிப்பாடல்களாக இல்லாமல் பசுமைப்பாடல்களாக நிரம்பிய பாடல் தொகுப்பைப் படைக்குமாறு ரகுமானிடம் கேட்டுக்கொண்டதாகப் பார்த்திபனே கூறினார்.[5] அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு விழா சென்னையில் சூன் 5, 2022 அன்று அபிஷேக் பச்சன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடந்தது மற்றும் திரைப்படத்திலிருந்து ஒற்றைப்பாடல் வெளியீடு(single release) ஏ. ஆர். ரஹ்மான் முன்னிலையில் சர்வதேச தொழிலாளர் நாளை முன்னிட்டு மே 1, 2022 அன்று வெளியானது.[6][7]
# | பாடல் | கலைஞர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "பாபம் செயாதிரு" | ஹரினி இவதுரி, நிரஞ்சனா ரமணன், கீர்த்தனா வைதியநாதன் | 7:07 | |
2. | "காயம்" | கடிஜா ரஹ்மான், சௌந்தர்யா பாலா, வீனா முரளி, டீப்தி சுரேஷ், சௌமியா | 5:53 | |
3. | "பெஜரா" | ஹரிசரண் | 3:40 | |
4. | "மாயவா தூயவா" | ஷ்ரேயா கோஷல் | 4:09 | |
5. | "கண்ணெதிரே" | சர்தக் கல்யாணி, ஹிரால் விரடியா | 3:53 |
# | பாடல் | கலைஞர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "மாயவா சாயவா" | ஷ்ரேயா கோஷல் | 4:09 |
இத்திரைப்படத்தைத் தமிழ்த் திரையுலகின் கலங்கரைவிளக்கம் என்று அழைத்துப் பாராட்டைக் குவித்தார் இயக்குநர் சீனு இராமசாமி.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.