இரண்டாம் உதயாதித்தவர்மன் ( Udayadityavarman II; கி.பி1050 முதல் 1066 வரை அங்கோர் இராச்சியத்தை ஆட்சி செய்த இவன் முதலாம் சூர்யவர்மனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தான்.[1]:137 ஆனால் அவனது மகன் அல்ல. இவன் முதலாம் யசோவர்மனின் மனைவியின் உறவினராவான்.
இரண்டாம் உதயாதித்தவர்மன் | |
---|---|
கம்போடியாவின் அரசன் | |
மேகாங் பகுதிகளில் வரி விலக்கு அளிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் இரண்டாம் உதயாதித்தவர்மன் காலத்திய கல்வெட்டு. வியட்நாமின் லாங் ஆன் மாகாணத்தின் மை குய் என்ற பகுதியில் கிடைத்தது. | |
ஆட்சிக்காலம் | 1050–1066 |
முன்னையவர் | முதலாம் சூரியவர்மன் |
பின்னையவர் | மூன்றாம் ஹர்ஷவர்மன் |
இறப்பு | 1066 |
இவன் சிவபெருமானைக் கௌரவிப்பதற்காக பாபூன் கோயிலைக் கட்டினான். ஆனால் சில சிற்பங்கள் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இவன் மேற்கு பரே நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்தையும் முடித்தான். மேலும், மேற்கு மெபோனின் மையத்தில், ஒரு உயர்ந்த தீவை கட்டி எழுப்பினான்.[1]:138[2]:103[3]:371} இவனது ஆட்சியின் போது, 1051, 1065 ஆம் ஆண்டுகளில், நடந்த பல கிளர்ச்சிகள் இவனது தளபதி சங்கராமனால் பல முறை முறியடிக்கப்பட்டன.[1]:138–139[2]:104
இன்றைய தாய்லாந்தின் ஆரண்யபிரதேத் நகருக்கு அருகில் அமைந்துள்ள இசுடோக் காக் தோம் கோயில் இவனது ஆட்சியின் போது கட்டப்பட்டது. முந்தைய கெமர் மன்னர்களின் வரிசையை விவரிக்கும் விரிவான கல்வெட்டின் கண்டுபிடிப்பு தளமாக இந்த கோயில் மிகவும் பிரபலமானது. கல்வெட்டு இப்போது பேங்காக்கில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இவனுக்குப் பிறகு இவனது இளைய சகோதரன் மூன்றாம் ஹர்ஷவர்மன் ஆட்சிக்கு வந்தான்.[1]:139
சான்றுகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.