Remove ads
புதுக்கோட்டை அரசர் From Wikipedia, the free encyclopedia
இரகுநாதராய தொண்டைமான் (Raja Sri Raghunatha Raya Tondaiman (1641-1730) என்பவர் புதுக்கோட்டை மன்னர்களில் முதலாமானவர் ஆவார். இவர் 1686 முதல் 1730வரை ஆட்சி செய்தார். இவரது வாழ்வின் துவக்கத்தில் இராமநாதபுரம் சேதுபதியிடம் போர்த் தலைவராக தனது வாழ்வைத் துவக்கினார். சேதுபதியிடம் இவர் ஆற்றிய பணிகளுக்காக 1686 ஆம் ஆண்டு, இவரை புதுக்கோட்டையின் சுதந்திர ஆட்சியாளராக சேதுபதி அங்கீகரத்தார்.[1]
இரகுநாதராய தொண்டைமான் | |
---|---|
புதுக்கோட்டை அரசர் | |
ஆட்சிக்காலம் | 1686 - ஏப்ரல் 1730 |
பின்னையவர் | விஜயரகுநாதராய தொண்டைமான் |
பிறப்பு | 1641 |
இறப்பு | ஏப்ரல் 1730 புதுக்கோட்டை |
மரபு | புதுக்கோட்டை |
தந்தை | ஆவடை இரகுநாத தொண்டைமான் |
விசயநகரப் பேரரசின் மன்னரான மூன்றாம் ஸ்ரீரங்கரிடம் படைத் தளபதியாகவும், கள்ளர் இனத் தலைவராகவும் இருந்த ஆவடையரகுநாத தொண்டைமானின் மகனாக 1641இல் இரகுநாதராய தொண்டைமான் பிறந்தார். ஆவடையரகுநாத தொண்டைமானின் வீரத்தையும் அவரது இரணுவப் பணிகளையும் பாராட்டி ஸ்ரீரங்கர் அவருக்கு 1639 ஆம் ஆண்டு ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய என்ற பட்டத்தையும் ஏராளமான நிலங்களையும், பரிசுகளையும் அளித்தார்.[2]
இரகுநாதராய தொண்டைமான் தனி ஆசிரியரிடம் பயிற்றுவிக்கப்பட்டார், 1661 இல் இவரது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் அவரது பதவிக்கு இவர் வந்தார். 1675 இல் இராமாநாதபுர அரசரும் இவரது மைத்துனருமான இரகுநாத கிழவன், இவரது உடமைகளை அங்கீகரித்தார். இராமநாதபுரம் அரசருக்காக இரகுநாதராய தொண்டைமான் பல போர்களில் ஈடுபட்டார். இவரது சேவையையும் நன்றியுணர்வையும் பாராட்டும் விதமாக இவருக்கு 1625 ஆம் ஆண்டில் திருமயம் கோட்டை மற்றும் நிலங்களையும் அளித்து, "புதுக்கோட்டை அரசர்" என்ற பட்டத்தையும் பயன்படுத்த அனுமதித்தார்.
இரகுநாதராய தொண்டைமான் 1686 ஆண்டு முதல் 1730 வரை தன் நாட்டை வலிமையாக்கி ஆண்டார். மேலும் இவர் இராமநாதபுர அரசரான இரகுநாத கிழவனிடம் நட்போடு இருந்தார். 1720 ஆம் ஆண்டில் இராமநாதபுர அரசர் இறந்ததைத் தொடர்ந்து, அடுத்த அரசராக பவானி சங்கரை முதலாம் சரபோஜி ஆதரித்தார். ஆனால் பவானி சங்கருக்கு எதிராக தாண்ட தேவரை இரகுநாதராய தொண்டைமான் ஆதரித்தார். இதையடுத்து சரபோஜியின் ஆதரவோடு தாண்ட தேவரைத் தோற்கடித்து, பவானி சங்கர் அரியணையைக் கைப்பற்றினார். பவானி சங்கருக்கு தான் கொடுத்த ஆதரவை மாற்றிக் கொண்ட சரபோஜி 1723இல் இராமநாதபுரத்தின்மீது படையெடுத்தார். இந்த விசயத்தில் இரகுநாதராய தொண்டைமான் தாண்ட தேவரையே ஆதரித்து அவரை வெற்றிபெற வைத்தார். 1730 ஏப்ரலில் இரகுநாதராய தொண்டைமான் இறந்தார். அதன்பிறகு அவரது பேரனான விஜயரகுநாதராய தொண்டைமான் அரியணை ஏறினார்.
இரகுநாதராய தொண்டைமானுக்கு ஆறு மனைவிகள். அவரது பிள்ளைகள் சிலரின் பெயர்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.