இயன் போத்தம்
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் From Wikipedia, the free encyclopedia
இயன் போத்தம் என்பவர் துடுப்பாட்ட விமர்சகரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். பன்முக ஆட்டக்காரராக இவர் படைத்த பல்வேறு சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இயன் டெரன்சு போத்தம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 நவம்பர் 1955 Heswall, Cheshire, England | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6அ்டி 2 in | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக ஆட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 474) | 28 சூலை 1977 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 18 சூன் 1992 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 33) | 26 ஆகத்து 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 ஆகத்து 1992 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1974–1986 | சோமர்செட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1987/88 | குயின்ஸ்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1987–1991 | வொர்செஸ்டர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992–1993 | டர்ஹாம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 22 August 2007 |
இவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் எடுத்ததுடன் 100 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.
வறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு இவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில் இடம்பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
இயன் போத்தம் செஷயரில் உள்ள எஸ்வாலில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஹெர்பர்ட் லெஸ்லி போத்தம் மற்றும் வயலட் மேரி ஆவர். இவரின் தந்தை இருபது ஆண்டுகள் விமானப் படையில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போதும் இவர் விமானப் படை வீரராக இருந்தார். இவரின் தாய் செவிலியர் ஆவார். போத்தமிற்கு இரண்டு வயதாக இருக்கும் போது இவரின் தட்ந்ஹைக்கு வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்ஸ் சில் பொறியாளராகப் பணி கிடைத்ததால் இவர்கள் யோவில்லிற்கு சென்றனர். இவரின் பெற்றோர் இருவருமே துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். இவரின் தந்தை வெஸ்ட்லேண்ட் அணிக்கும் தாய் ஷெர்போன் அணியிலும் விளையாடினர். பள்ளிக் காலத்திற்கு முன்பாகவே இவருக்கு துடுப்பாட்டம் மீது ஆர்வம் இருந்துள்ளது. பள்ளிக் காலத்தில் யோவிலில் உள்ள கிராமர் பள்ளியின் சுற்றுச் சுவரின் மீது ஏறி அங்கு மற்றவர்கள் துடுப்பாட்டம் விளையாடியதனைப் பார்த்துள்ளார். இவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது பந்தினை வைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்துள்ளார்.
போத்தம் ,நகரத்தில் உள்ள மில்ஃபோர்ட் ஜூனியர் பள்ளியில் பயின்றார். அங்குதான் துடுப்பாட்ட விளையாட்டின் மீது இவருக்கான ஈடுபாடு அதிகமானது. தனது பள்ளிக் காலங்களில் ஒன்பது வயதாக இருக்கும் போது இவர் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். இவரது சக நண்பர்களை விட இவர் வயது குறைவானவராக இருந்தார்.[1][2] தன்னை விட வயதான சிறுவர்களுக்கு எதிராக விளையாடுவது இவரை அதிரடியாக அடிக்க கற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. மேலும் இவரின் துடுப்பாட்டம் ஆடும் திறனை மேம்படுத்தியது. அதே வயதில் இவர் வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடிய தனது தந்தையுடன் போட்டிகளுக்குச் சென்றார், இவர் சிறுவர் படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன.[3]
போதம் யியோவிலில் உள்ள பக்லர்ஸ் மீட் விரிவான பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு இவர் தொடர்ந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார் மற்றும் பள்ளியின் துடுப்பாட்ட மற்றும் கால்பந்து அணிகளுக்காக விளையாடினார். இவர் பதின்மூன்று வயதாக இருந்தபோது பள்ளியின் 16 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியின் தலைவராக ஆனார். பள்ளிக்கான துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியபோது சோமர்செட் கவுண்டி துடுப்பாட்ட சஙகத்தின் இளைஞர் பயிற்சியாளர் பில் ஆண்ட்ரூஸின் கவனத்தை ஈர்த்தது. தனது 13 ஆம் வயதில், வில்ட்ஷயருக்கு எதிராக சோமர்செட் அணி சார்பாக விளையாடியபோது இவர் 80 ஓட்டங்கள் எடுத்தார்.இவர் மட்டையாளர் எனக் கருதியதால் அணியின் தலைவரான பில் இசுக்கோலம்பே இவரைப் பந்துவீச அழைக்கவில்லை.[4] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போத்தம் கால்பந்து அல்லது துடுப்பாட்டம் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. கிரிஸ்டல் பேலஸின் மேலாளர் பெர்ட் ஹெட், கால்பந்து லீக் பிரிவில் சேர்வதற்கான பயிற்சிப் படிவங்களை இவருக்கு வழங்கினார்.[5] தனது தந்தையுடன் இந்த வாய்ப்பைப் பற்றி விவாதித்த பின்னர், இவர் தான் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று நம்பியதால், தொடர்ந்து துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தார்.[6]
சர்வதேச போட்டிகள்
போத்தம் 102 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 5,200 ஓட்டங்களை 33.54 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் அதிக பட்சமாக 208 ஓட்டங்களை எடுத்தார். அதில் 14 நூறுகளும் அடங்கும். பந்துவீச்சில் 383 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 28.40 ஆக இருந்தது. அதில் 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பது வீச்சு ஆகும். மேலும் ஒரு போட்டியில் 10இலக்குகளை நான்குமுறை வீழ்த்தியுள்ளார். மேலும் 120 கேட்ச் பிடித்துள்ளார்.
1976 முதல் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குறைந்த பட்ச ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இவர் 2,113 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 79 ஓட்டங்கள் எடுத்ததே அதில் அதிகபட்சம் ஆகும். பந்துவீச்சில் 145 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் 36 கேட்சுகளையும் பிடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் குறைந்த பட்ச ஓவர்கள் ஆகிய இரு போட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் குறைந்த பட்ச ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்தபோதிலும் சில போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அதில் ஆரு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுள்ளார். போத்தம் 1979, 1983 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிணக் கோப்பையில் விளையாடியுள்ளார். அதில் 22 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அ979 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளும் அடங்கும். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி அரை இறுதியிடன் வெளியேறிய அணியிலும் இவர் விளையாடினார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை 1,000 ஓட்டங்களும் 100 இலக்குகளையும் கைப்பற்றிய 21 ஆவது சர்வதேச வீரர் ஆவார். இவர் மொத்தமாக 5,200 ஓட்டங்களையும் 383 இலக்குகளையும் கைப்பற்றினார்.மேலும் 1220 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.
இந்தியா 50
போத்தமின் மூன்றாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் 1980 பிப்ரவரியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது ஆகும்.[7] இந்தியத் துடுப்பாட்ட அணி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி கிடைத்து 50 ஆம் ஆண்டின் நினைவாக இந்தப் போட்டி நடைபெற்றது. எனவே இங்கிலாந்து பம்பாயில் உள்ள வான்கடே அரங்கத்தில் ஒரு நினைவு தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியது. தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஒரு நூறு ஓட்டம் மற்றும் ஒரே போட்டியில் பத்து இழப்புகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.[8] இந்த போட்டியில் இங்கிலாந்தின் இழப்புக் கவனிப்பாளர் பாப் டெய்லர் பத்து கேட்சுகளைப் பிடித்தார். அதில் எட்டு அவரின் நிறைவுகளில் பிடித்தது.[9]
நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் மட்டையாட்டம் செய்ய முடிவு செய்தது.பந்துவீச்சில் போத்தம் 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றினார். இந்திய அணி முதல் நாளில் 242 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 296 ஓட்டங்களை எடுத்தது. இஹில் போத்தம் 144 பந்துகளில் 114 ஓட்டங்களை எடுத்தார்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.