Remove ads
From Wikipedia, the free encyclopedia
இயன் கிருகரன் (Ian karan, பிறப்பு: சூன் 17, 1939) செருமனியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். இவர் 2010, ஆகத்து 25 முதல் 2011 மார்ச் 7 வரை ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சர் (செனட்டர்) ஆக இருந்தார்.
இயன் குருகரன் Ian Karan | |
---|---|
இயன் கரன் தனது இரண்டாவது மனைவி பார்பராவுடன் | |
ஹம்பேர்க் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சர் | |
பதவியில் 25 ஆகத்து 2010 – 7 மார்ச் 2011 | |
முன்னையவர் | ஏக்செல் கெதாச்கோ |
பின்னவர் | பிராங்க் ஹோர்ச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1939 (அகவை 84–85) பருத்தித்துறை, இலங்கை |
அரசியல் கட்சி | செருமனின் கிறித்தவ சனநாயக ஒன்றியம் |
வேலை | தொழிலதிபர் |
இனம் | தமிழ் செருமன் |
கிருகரன் இலங்கையில் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1][2][3] கரவெட்டி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.[4] இவர் பிறக்கும் போதே இவரது தாயார் மகப்பேற்று அறுவைச் சிகிச்சையில் இறந்து விட்டார். மூன்று ஆண்டுகளில் ஆகத்து 1942 இல் இவரது தந்தையாரும் வட ஆப்பிரிக்காவில் வான்படை அதிகாரியாக ரோயல் இந்தியன் வான்காப்பு படையில் பணிபுரியும் போது இரண்டாம் உலகப் போரில் இறந்தார். கிருகரன் மெதடித்த பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5][6][7] ஹார்ட்லிக் கல்லூரியில் இருந்து விலக்கப்பட்ட கைருகரன்[4][6] 1955 ஆம் ஆண்டில் தடகள உதவித்தொகை கொண்டு லண்டன் வந்து அடைந்தார். அங்கு லண்டன் வர்த்தக உயர் கல்விப் பாடசாலையில் பயின்றார். பட்டப்படிப்பு முடிக்காமலே ஆங்கிலக் கிளை வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி செய்யும் செங்கர் (schenker) நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[8]
கிறித்தவரான கிருகரன்[9] 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருமனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரண்டு முறை திருமணம் செய்த இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[4]
செருமனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய இவர்[1][4][8] பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அந்நிறுவனம் இப்போது செருமனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்துள்ளது.
1970களில் செருமனியில் கம்பேர்க் வந்தடைந்தார். அங்கு சிலகாலம் உணவு விடுதியில் வேலை செய்து வந்தார். கம்பேர்க்கில் ஏற்றுமதி இறக்குமதி சேவை நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்த கரன் 1975 இல் தனது சொந்த நிறுவனமான கிலாவ் கொண்டேனர் (Clou Container) ஐ உருவாக்கி 1990 களில் விற்றார். 1996 இல் மீண்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார், அதற்கு கப்பிற்டல் லீஸ் (Capital Lease) என்று பெயர் இட்டார். 2007 இல் கப்பல் சரக்குப் பெட்டிகளை வாடகைக்கு விடும் நிறுவனங்களில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். 2007 இல் அந்த நிறுவனத்தை டிவிபி வங்கிக்கு (DVB Bank) பொது நிதி முறை (FONDS) விற்றார். அவரின் துணை நிறுவனமான கப்பிற்றல் சர்வதேச (Capital Intermodal GmbH) நிறுவனத்தை நடாத்தி வருகிறார். இது சிறப்பு கப்பல் சரக்குப் பெட்டிகளை வாடகைக்குக் கொடுத்து வருகிறது.
இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். 2009 லிருந்து யேர்மனி கம்பேர்க் நகரில் விளையாட்டுத் துறையில், அரசியல் மேலதிகாரியாக சேவை செய்து வருகிறார். 2009 இல் பிரித்தானிய மற்றும் செருமனியக் குடியுரிமை எடுத்து கொண்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.