முன்னுரை From Wikipedia, the free encyclopedia
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். டிசம்பர் 1986, 1987[1] முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.
சட்டம். |
இச்சட்டம் 1991 மற்றும் 1993 [1] களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன. நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002[1] இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003[1] புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004[1] முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கீழே காணப்படும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது
- இச்சட்டம் மைய அரசால்[1] விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
- அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை [1] வழங்கவோ வழி செய்கின்றது.
- நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-[1]
- (1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விறகப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை.
- (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை.
- (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை.
- (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை.
- (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.
–
உதாரணம்;
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையிலான முகமைகள் செயல்படுகின்றன.
மாவட்டக் குறைதீர் மன்றத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாநில அரசும் மாவட்ட அளவில் இம்மன்றத்தை அமைத்திட வேண்டும். இம்மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதி தகுதியுடையவர் தலைவராகவும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண் உறுப்பினர் சமூக சேவையில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். மற்றொரு உறுப்பினர் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இம்மன்றத்தில் மாவட்ட எல்லையிலான வழக்குகள் மற்றும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் நடத்தப் பெறுகின்றன.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத் தலைநகரில் அமைத்திட வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும் மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்===
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசு, புதுதில்லியில் அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும், நான்கு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் நான்கு பேரும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இருப்பர். இந்த ஆணையத்தில் 100 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.