இந்திய தேசிய கால்பந்து அணி (Indian national football team) என்பது இந்தியாவின் தேசிய கால்பந்து அணியாகும். இது அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் முறைப்படுத்தப்படுகிறது. இது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் உறுப்பு கூட்டமைப்பாகும். 1948-ஆம் ஆண்டிலிருந்து ஃபிஃபாவுடன் இணைந்துள்ளது. ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒரு தொடக்ககால உறுப்பு அமைப்பாக இணைந்தது. இந்திய தேசிய கால்பந்து அணியின் பொற்காலம் 1950-கள் மற்றும் 1960-கள் ஆகும். அக்காலகட்டத்தில் (1950-ல்) கால்பந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. (மற்ற அனைத்து ஆசிய நாடுகளும் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்கவில்லை) ஆயினும் இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. பயணச்செலவுகள், குறைவான பயிற்சி, அணித்தேர்வுக் குழப்பங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உலகக் கோப்பையைவிட முக்கியமானதாகக் கருதியமை ஆகிய பல காரணங்கள் உலகக் கோப்பையில் பங்கேற்காததற்குக் கூறப்படுகின்றன.[3] இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், ஒரு ஆசியக் கோப்பையில் வெள்ளி மற்றும் உலகக் கோப்பையில் சிறந்த செயல்திறன் காட்டிய ஆசிய நாடு என்ற சிறப்பு ஆகிய பெருமைகள் இந்திய கால்பந்து அணிக்கு உரித்தாகும்.
அடைபெயர் | நீலப் புலிகள் (Blue Tigers) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு | ||
மண்டல கூட்டமைப்பு | தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு (தெற்கு ஆசியா) | ||
கண்ட கூட்டமைப்பு | ஏஎஃப்சி (ஆசியா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | ஸ்டீவன் கான்ஸ்டன்டைன் | ||
அணித் தலைவர் | சுனில் சேத்ரி | ||
Most caps | பாய்ச்சங் பூட்டியா (107) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பிரதீப் பானர்ஜி (65) | ||
பீஃபா குறியீடு | IND | ||
பீஃபா தரவரிசை | 100 1 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 94 (பிப்ரவரி 1996) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 169 (செப்டம்பர் 2012) | ||
எலோ தரவரிசை | 159[1] | ||
அதிகபட்ச எலோ | 48 (மே 1964) | ||
குறைந்தபட்ச எலோ | 177 (1977) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
உத்தியோகபூர்வமற்ற: ஆத்திரேலியா 5–3 இந்தியா (சிட்னி, அவுஸ்திரேலியா; 3 செப்டெம்பர் 1938) உத்தியோகபூர்வ: இந்தியா 1–2 பிரான்சு (லண்டன், இங்கிலாந்து; ஜூலை 31, 1948)[2] | |||
பெரும் வெற்றி | |||
ஆத்திரேலியா 1–7 India (Sydney, Australia; 12 December 1956) India 6–0 கம்போடியா (New Delhi, இந்தியா; August 17, 2007) | |||
பெரும் தோல்வி | |||
சோவியத் ஒன்றியம் 11–1 இந்தியா (மாஸ்கோ, USSR; 16 September 1955) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1950 இல்) | ||
சிறந்த முடிவு | தகுதிபெற்றது | ||
ஆசியக் கோப்பை (கால்பந்து) | |||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 1964 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாம்-இடம்: 1964 |
மேலும் பார்க்க
குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.