From Wikipedia, the free encyclopedia
இசுப்புட்னிக் 1 (Sputnik 1)[1] பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும்.[2] இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
இசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.