Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஆள்களப் பெயர் அல்லது திரளப் பெயர் (ஆங்கிலம்: Domain Name) என்பது இணையத்தில் நிருவாக அதிகாரம், கட்டுப்பாடு என்பனவற்றை வரையறுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட சரம் ஆகும். களப் பெயர் முறைமையின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆள்களப் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.[1] காம், நெட், ஆர்க் மற்றும் நாடுகளுக்கான இணைய ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயர்களாகும்.[2]
மனிதர்கள் வலைக் கடப்பிடங்களின் பெயர்களை இலகுவாக நினைவில் வைத்திருப்பதற்கு ஆள்களப் பெயர்கள் உதவுகின்றன. புரவன் பெயரையும் ஆள்களப் பெயரையும் இணைத்து இணையத்தள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன. புரவன் பெயர் உரலியில் ஒரு பகுதியாகக் காணப்படும் (உ-ம்: தளம்.ஆள்களமையம்.இலங்கை பரணிடப்பட்டது 2013-06-26 at the வந்தவழி இயந்திரம்).[3]
களப் பெயர் முறைமை 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[4]
இன்று இணைய ஆள்களப் பெயர் வெளியை ஐ.சி.ஏ.என்.என். என்ற நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது.[5]
ஆள்களப் பெயர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றினிடையே தளம்.ஆள்களமையம்.இலங்கை பரணிடப்பட்டது 2013-06-26 at the வந்தவழி இயந்திரம் என்றவாறு புள்ளிகள் பயன்படுத்தப்படும்.
com, net, |org போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும்.[7] நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும்.[8] தற்போது இலங்கை, இந்தியா என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[9]
களப் பெயர் முறைமையானது அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ஒருங்குறியில் அமைந்த இணையத்தள முகவரிகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறைக்கு மாற்றப்படும். உதாரணமாக தளம்.ஆள்களமையம்.இலங்கை பரணிடப்பட்டது 2013-06-26 at the வந்தவழி இயந்திரம் என்பது xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a பரணிடப்பட்டது 2013-06-26 at the வந்தவழி இயந்திரம் என்று மாற்றப்பட்டுள்ளது.
முதலாவது வர்த்தகம் சார்ந்த ஆள்களப் பெயரான symbolics.com என்பது சிம்பாலிக்ஸ் நிறுவனத்தால் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.[10]
ஆள்களப் பெயர் பதிவானது ஐ. சி. ஏ. என். என். என்னும் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.