Remove ads
செருமனிய ஓவியர், அச்சு தயாரிப்பாளர், கணிதவியலாளர் மற்றும் கோட்பாட்டாளர் (1471-1528) From Wikipedia, the free encyclopedia
ஆல்பிரெஃக்ட் டியூரெ (/ˈdʊərər, ˈdjʊərər/;[1] இடாய்ச்சு: [ˈalbʁɛçt ˈdyːʁɐ]; (மே 21, 1471– ஏப்ரல் 6, 1528)[2] என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய நீர்ச்சாந்து (water color) இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், அதனை தன்னுடைய கலைப்படைப்புகளில் வெளிப்படுத்தியமையால் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ரபாயல், ஜியோவானி பெல்லினி மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட முக்கிய இத்தாலிய கலைஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
ஆல்பிரெஃக்ட் டியுரே | |
---|---|
ஆபிரெஃக்ட் டுயூரேயின் தன்னுருவப்படம் (1500), அட்டையில் எண்ணெய் வண்ண ஓவியம், ஆல்ட்டெ பினகொத்தெக்,மியூனிஃக் | |
தேசியம் | செருனியர் |
அறியப்படுவது | அச்சுருவாக்கம், தீட்டோவியம், கீறுங்கலை |
டியுரே 1471 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் திகதி தம் பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். அத்துடன் அவர் தம் பெற்றோர்களுக்கு இரண்டாவது ஆண் பிள்ளையுமாவார். இவரின் பெற்றோர்களுக்கு பதினான்கு முதல் பதினெட்டு பிள்ளைகள் வரை இருந்துள்ளனர். டியுரேயின் தந்தையின் பெயர் அஜ்டொசி (Ajtósi) என்பதாகும், அவர் ஒரு பொற்கொல்லன் ஆவார். ஜெர்மானியப் பெயரான டியுரே ஹங்கேரிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். பிற்காலத்தில் டியுரே எனும் பெயர் ரியுரே என மாற்றப்பட்டது. அதுவே குடும்பப் பெயராகவும் மாற்றப்பட்டது.
1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டியூரே பாஸ்லே நகரத்திற்குச் சென்றாரர் . மேலும் அங்குள்ள தனது சகோதரனுடைய வீட்டில் தங்கினார்.[3] சிறிது காலத்திலேயே தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். சூலை 7,1494 ஆம் ஆண்டில் தன்னுடைய 23 ஆம் வயதில் ஆக்னஸ் ஃப்ரே என்பவரை மணந்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை
திருமணம் ஆகி மூன்றுமாதத்திற்குள் இத்தாலிக்குத் தனியாகச் சென்றார். ஏனெனில் அங்கு உலகம்பரவுநோய் பரவி வந்தது. மேலும் அங்கு சென்று கலை உலகின் மாற்றங்களை கற்றுத் தேர்ந்தார்.[4]
தலைப்பு | ஆண்டு | செய்நுட்பம் | வடிவமைப்பு | காட்சியகம் | |
---|---|---|---|---|---|
பார்பரா டியூரேவின் சுய உருவப்படம் | 1490 | நெய்யோவியம் | 47 × 38 செண்ட்டி மீட்டர் | ஜேர்மனிஷ்சஸ் நேஷனல்மயூயூம், நியூரம்பெர்க், ஜெர்மனி | |
டியூரேவின் தந்தையின் சுய உருவப்படம் | 1490 | நெய்யோவியம் | 47.5 × 39.5 செண்ட்டி மீட்டர் | உப்பிஸி, ஃப்ளோரன்ஸ் | |
புலம்பல்கள் | 1498 | நெய்யோவியம் | 147 × 118 செண்ட்டி மீட்டர் | ஜேர்மனிஷ்சஸ் நேஷனல்மயூயூம், நியூரம்பெர்க், ஜெர்மனி | |
சுய உருவப்படம் | 1493 | துணியில் எண்ணெய் கொண்டு வரைதல் | 56.5 × 44.5 செண்ட்டி மீட்டர் | இலூவா அருங்காட்சியகம், பாரிஸ் | |
துன்பகரமான மனிதன் (துன்பத்தின் உருவமான மனிதன்) | 1493 | நெய்யோவியம் | 30 × 19 செண்ட்டி மீட்டர் | ||
வளை விதானவழி (ஆர்ச்)முன் கன்னியும் குழந்தையும் | 1495 c. | நெய்யோவியம் | 48 × 36 செண்ட்டி மீட்டர் | பர்மாவுக்கு அருகிலுள்ள மமீனோ | |
ஃப்ரெடெரிக் சாக்சனிஸின் ஞானஸ்நானத்தின் உருவப்படம் | 1496 | டெம்பரா கேன்வாஸ் | 76 × 57 செண்ட்டி மீட்டர் | பெர்லின் | |
ட்ரெஸ்டென் அல்ட்ராபீஸ் (மூன்று பிரிவு ) ஜெர்மனியின் மறுமலர்ச்சி கலைஞரான ஆல்ஃபிரட் டியூரேவின் படைப்பு 1496- 1497 | 1496 | நெய்யோவியம் | 117 × 96.5 செண்ட்டி மீட்டர் | டிரெஸ்டன் | |
காட்டுப்பகுதியில் செயிண்ட் ஜெரோம் | 1496 | நெய்யோவியம் | 23 × 17 செண்ட்டி மீட்டர் | இலண்டன் தேசிய அருங்காட்சியகம் | |
பரலோகக் (சொர்க்கம்) காட்சி | 1496 | நெய்யோவியம் | 23 × 17 செண்ட்டி மீட்டர் | இலண்டன் தேசிய அருங்காட்சியகம் | |
கன்னிப் பெண்ணின் ஏழு கவலைகள் | 1496 | நெய்யோவியம் | 109 × 43 செண்ட்டி மீட்டர் (மத்தியில் உள்ள பொருத்துப் பலகை), 63 × 46 செண்ட்டி மீட்டர் (ஒவ்வொரு பக்கமும் உள்ள பொருத்துப் பலகை) | மியூனிக், ஜெர்மனி | |
ஓவியனின் தந்தை | 1497 | நெய்யோவியம் | 51 × 40.3 செண்ட்டி மீட்டர் |
| |
இளம்பெண்ணின் சுய உருவப்படம் | 1497 | நெய்யோவியம் | 56 × 43 செண்ட்டி மீட்டர் | பிராங்க்ஃபுர்ட், ஜெர்மனி | |
இளம் ஃபர்லகெரின் சுய உருவப்படம் | 1497 | நெய்யோவியம் | 56.5 × 42.5 செண்ட்டி மீட்டர் | பெர்லின் மாகாண அருங்காட்சியகம் | |
ஆணின் சுய உருவப்படம் | 1497 | துணியில் எண்ணெய் கொண்டு வரைதல் | 24.2 × 20 செண்ட்டி மீட்டர் | ஹெய்ன்ஸ் கஸ்டம்ஸ் சேகரிப்பு, க்ருஸ்லிங்கென் | |
மடோனா மற்றும் குழந்தை | 1496 - 1499 | நெய்யோவியம் | 52.4 × 42.2 செண்ட்டி மீட்டர் | கலை அருங்காட்சியாகம், வாசிங்டன், டி. சி. | |
லாட் மற்றும் அவரது குழந்தைகள் | 1496 - 1499 | நெய்யோவியம் | 52.4 × 42.2 செண்ட்டி மீட்டர் | கலை அருங்காட்சியாகம், வாசிங்டன், டி. சி. | |
ஆதாம்- ஏவாள் | 1507 | நெய்யோவியம் | 209 x 81 செண்ட்டி மீட்டர் | மியூஸோ டெல் பிராடோ, மாட்ரிட் | |
புனித அன்னை மரியாளின் பிரார்த்தனை | 1518 | நெய்யோவியம் | 53x 43 செண்ட்டி மீட்டர் | பெர்லின் மாகாண அருங்காட்சியகம் |
படம் | தலைப்பு | ஆண்டு | செய்நுட்பம் | வடிவமைப்பு | குழு தொகுதி பிரிவு | |
---|---|---|---|---|---|---|
புனித பாலின் சமயமாற்றம் | 1494 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 295 × 217 மில்லிமீட்டர் | |||
மரணத்தால் தாக்கப்பட்ட பெண் | 1495 |
|
110 × 92 mm | பி92 | ||
தி கிரேட் கூரியர் (பாதுகாவலர்) |
|
செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 100 × 115 mm | |||
புனித குடும்பம் ( உடன் தும்பி உள்ளது) | 1495 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 151 × 140 mm | B44 | ||
காதலின் அன்பளிப்பு | 1495 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 151 × 140 mm | B93 | ||
ஊதாரித்தனமான மகன் | 1494 - 1498 | Copper engraving | 247 × 191 mm | B28 | ||
காட்டில் புனித ஜெரோம் | 1494 - 1498 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 316 × 225 mm | B61 | ||
செயின்ட் ஜான் கிறிஸ்ஸ்டோமின் தவம் | 1494 - 1498 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 183 × 119 mm | B63 | ||
சிறிய அதிர்ஷ்டம் | 1495–1496 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 120 × 66 mm | B78 | ||
தி சுமால் கூரியர் (பாதுகாவலர்) | 1496 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 110 × 78 mm | B80 | ||
குக் மற்றும் அவரது மனைவி | 1496 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 109 × 77 mm | B84 | ||
மூன்று உழவர்களின் உரையாடல் | 1496–1497 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 108 × 77 mm | B86 | ||
உழவன் தனது மனைவியுடன் | 1496–1498 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 109 × 77 mm | B83 | ||
நிர்வாணமான நான்கு பெண்கள் | 1497 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 194 × 135 mm | B75 | ||
மரணத்தால் எச்சரிக்கப்பட்ட இளம் தம்பதியினர் | 1496–1500 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 194 × 120 mm | B94 | ||
குரங்குடன் மடோனா | 1496–1500 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 190 × 121 mm | B42 | ||
மருத்துவரின் கனவு | 1496–1500 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 190 × 121 mm | B76 | ||
கடல் அரக்கன் | 1496–1500 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 248 × 189 mm | B71 | ||
புனித செபஸ்தியார் கட்டுண்ட நிலையில் | 1497–1501 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 106 × 76 mm | B56 | ||
சூனியக்காரி | 1498–1502 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 115 × 71 mm | B67 | ||
ஆதாம் , ஏவாளுடன் | 1504 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 248 × 192 mm | B1 | ||
சிறிய குதிரை | 1505 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 165 × 108 mm | B96 | ||
பெரிய குதிரை | 1505 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 167 × 119 mm | B97 | ||
புனித ஜானுடன் புனித குடும்பம் | 1510 | 216 × 190 mm | B43 | |||
மரத்தின் அடியில் மடோனா | 1513 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 117 × 75 mm | B35 | ||
போர் வீரன் , இறப்பு, சாத்தான் | 1513 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 246 × 188 mm | B98 | ||
விவசாய ஜோடியின் நடனம் | 1514 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 117 × 74 mm | B90 | ||
புனித ஜெரோம் படித்துக்கொண்டிருக்கும் போது | 1514 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 247 × 188 mm | B60 | ||
சுவரின் அருகில் மடோனா | 1514 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 147 × 101 mm | B40 | ||
புனித அப்போஸ்தலர் பால் | 1514 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 118 × 74 mm | B50 | ||
புனித அப்போஸ்தல தாமஸ் | 1514 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 117 × 75 mm | B48 | ||
தோட்டத்தில் வேதனை | 1515 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 224 × 157 mm | B19 | ||
புனித அந்தோனியார் | 1519 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 98 × 142 mm | B58 | ||
சந்தையில்உழவரும் அவரது மனைவியும் | 1519 | செம்புத் தகட்டு உட்செதுக்கல் | 98 × 142 mm | B58 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.