பால்டிக் செருமனிய கட்டிடக் கலைஞர், நாஜி அரசியல்வாதி மற்றும் சித்தாந்தவாதி (1893-1946) From Wikipedia, the free encyclopedia
ஆல்பிரட் எர்ன்ஸ்ட் ரோசன்பெர்க் (இடாய்ச்சு மொழி: Alfred Ernst Rosenberg ⓘ), (ஜனவரி 12, 1893 – அக்டோபர் 16, 1946), பால்டிக் ஜெர்மானியக் கோட்பாட்டாளரும் ஜெர்மன் நாசிக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவருமாவார்.
ஆல்பிரட் ரோசன்பெர்க் Alfred Rosenberg | |
---|---|
பிறப்பு | 12 சனவரி 1893 தாலின் |
இறப்பு | 16 அக்டோபர் 1946 (அகவை 53) நியூரம்பெர்க் |
கல்லறை | Wenzbach |
படிப்பு | அறிவியல் முனைவர் |
படித்த இடங்கள் |
|
பணி | பத்திரிக்கையாளர், மாணவர், அரசியல்வாதி, எழுத்தாளர், நிர்வாகி, opinion journalist, nazi |
விருதுகள் | War Merit Cross, Blood Order, Golden Party Badge |
கையெழுத்து | |
இவர் கட்டிடக்கலையை ரஷ்யாவிலிருந்த (தற்போது எசுத்தோனியாவிலுள்ள) ரிகா தொழிற்கல்வி நிலையத்திலும், பொறியியலை மாஸ்கோ உயர் தொழில்நுட்பப் பள்ளியிலும் பயின்றார்.[1][2] அதே பள்ளியில் 1917 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். ரஷ்யப்புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த அவ்வேளையில் இவர் ரஷ்யப்புரட்சி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளித்தார்.
டீட்ரிக் எக்கார்ட் என்னும் தேசிய ஜெர்மன் தொழிலாளர் கட்சித் தலைவர் இவரை இட்லரிடம் அறிமுகம் செய்தார். அது முதல் நாசி அரசாங்கத்தின் செயல் வடிவங்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். இனவெறிக்கொள்கை, யூதப்பகைமை, வெர்செய்ல் ஒப்பந்தங்களை மீறுதல்[3] போன்ற செயல்களில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது. கிருத்துவத்தை வெறுத்த[4] ரோசன்பெர்க், கிருத்துவத்தை நடைமுறைக்குகந்த சமயமாக (Positive Christianity) மாற்ற முனைந்தார்.[5]
இவருக்கு இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமைக்கப்பட்ட நியூரம்பெர்க் விசாரணை ஆணையத்தினால் போர் விதிமீறல் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் அக்டோபர் 16, 1946 இல் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.