ஆர்தர் பி. மெக்டொனால்டு
கனடிய இயற்பியலாளர் From Wikipedia, the free encyclopedia
ஆர்தர் புரூசு மெக்டொனால்டு (Arthur 'Art' Bruce McDonald, பிறப்பு: ஆகத்து 29, 1943) கனடிய இயற்பியலாளரும், சத்பரி நுண்நொதுமி (நியூத்திரினோ0 வானாய்வகக் கழகத்தின் பணிப்பாளரும் ஆவார். நுண்நொதுமிகள் அல்லது நியூத்திரினோக்கள் நிறை ( திணிவு) ஏதும் கொண்டிருக்கின்றதா என்றிருந்த அடிப்படைக்கேள்விக்கு விடையாக அது ஒரு நிறையை (திணிவை)க் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், சப்பானைச் சேர்ந்த தக்காக்கி கஜித்தாவுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]
ஆர்தர் பி. மெக்டொனால்டு Arthur B. McDonald | |
---|---|
பிறப்பு | Arthur Bruce McDonald ஆகத்து 29, 1943 சிட்னி நோவா இசுக்கோசியா |
வாழிடம் | கிங்சிட்டன், ஒன்ராறியோ |
குடியுரிமை | கனடியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | பிரின்சிட்டன் பல்கலைக்கழகம், குயின்சு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தல்கவுசி பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
அறியப்படுவது | சூரிய நுண்நொதுமி (நியூத்திரினோ) நிறையுள்ளமை கண்டமை |
விருதுகள் | பெஞ்சமின் பிராங்கிளின் பதக்கம் (2007) என்றி மார்சல் டோரி விருது (2011) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2015) |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.