From Wikipedia, the free encyclopedia
ஆயிரமாண்டு அல்லது சாவிரம் (Millennium) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும். நாட்காட்டி அமைப்பொன்றினை அடியொட்டி இவை குறிப்பிடப்பட்டாலும் சில சமய நூல்களில் இவை துல்லியமாக, ஆண்டு எண்ணிக்கை ஆயிரமாக, இருக்காதிருக்கலாம்.
தவிர துவக்க ஆண்டு சூன்யத்தில் துவங்குகிறதா அல்லது ஒன்றில் துவங்குகிறதா எனவும் குழப்பங்கள் நேருகின்றன. அண்மையில் 2000 ஆண்டு ஆயிரமாண்டாகக் கொண்டாடப்பட்ட வேளையில் ஆண்டு முதல்நாள் மூன்றாம் ஆயிரமாண்டு துவங்குகிறதா அல்லது இறுதியிலா என குழப்பம் வந்தது.
கிரிகோரியன் நாட்காட்டி அமைப்பில் 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரமாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரமாண்டு என்று முடிவு காணப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.