விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேச ஆளுநர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலத் தலைவர் ஆவார். 1953 முதல் இன்று வரை பதவியில் உள்ள ஆந்திர மாநிலம் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் உட்பட ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநர்களின் பட்டியல் இது. விசயவாடாவில் அமைந்துள்ள ஆளுநர் இல்லம் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம். ஈ. சீ. இல. நரசிம்மன் நீண்ட காலம் ஆளுநராக பதவி வகித்தவர். 13 பெப்ரவரி 2023 முதல் தற்போதைய பதவியில் சையத் அப்துல் நசீர் உள்ளார்.
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | ஆளுநர் இல்லம், விசயவாடா, ஆந்திரப் பிரதேசம் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | சந்துலால் மாதவ்லால் திரிவேதி |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
இணையதளம் | www |
ஆந்திர மாநில ஆளுநர்கள், வடக்கு ஆந்திரா, கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை பகுதிகளை உள்ளடக்கியது ஆந்திர மாநிலம். இந்த மாநிலம் 1953 இல் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
ஆந்திர பிரதேச மாநில போர்ட்டலில் இருந்து தரவு.[1]
# | பெயர் | உருவப்படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | கால அளவு | நியமித்தவர் |
---|---|---|---|---|---|---|
1 | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | 1 அக்டோபர் 1953 | 31 அக்டோபர் 1956 | 3 ஆண்டுகள், 30 நாட்கள் | இராசேந்திர பிரசாத் |
நவம்பர் 1, 1956 அன்று, ஐதராபாத் மாநிலம் ஒழிக்கப்பட்டது; அதன் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் கோட்டங்கள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதன் எஞ்சிய தெலுங்கு மொழி பேசும் பகுதி, ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மூலம் 2 சூன் 2014 அன்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களாக ஐக்கிய ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டது.
# | பெயர் | உருவப்படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | கால அளவு | நியமித்தவர் |
---|---|---|---|---|---|---|
1 | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | 1 நவம்பர் 1956 | 1 ஆகத்து 1957 | 0 ஆண்டுகள், 273 நாட்கள் | இராசேந்திர பிரசாத் | |
2 | பீம் சென் சச்சார் | 1 ஆகத்து 1957 | 8 செப்டெம்பர் 1962 | 5 ஆண்டுகள், 38 நாட்கள் | ||
3 | சத்யவந்த் மல்லன்னா சிறீநாகேசு | 8 செப்டெம்பர் 1962 | 4 மே 1964 | 1 ஆண்டு, 239 நாட்கள் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
4 | பட்டம் தாணு பிள்ளை | 4 மே 1964 | 11 ஏப்பிரல் 1968 | 3 ஆண்டுகள், 343 நாட்கள் | ||
5 | கந்துபாய் கசன்ஜி தேசாய் | – | 11 ஏப்பிரல் 1968 | 25 சனவரி 1975 | 6 ஆண்டுகள், 289 நாட்கள் | சாகீர் உசேன் |
6 | எசு. ஒபுல் ரெட்டி | – | 25 சனவரி 1975 | 10 சனவரி 1976 | 0 ஆண்டுகள், 350 நாட்கள் | பக்ருதின் அலி அகமது |
7 | மோகன் லால் சுகாதியா | 10 சனவரி 1976 | 16 சூன் 1976 | 0 ஆண்டுகள், 158 நாட்கள் | ||
8 | இராமச்சந்திர தோண்டிபா பண்டாரே | 16 சூன் 1976 | 17 பெப்பிரவரி 1977 | 0 ஆண்டுகள், 246 நாட்கள் | ||
9 | பிபின்சந்திரா சீவன்லால் திவான் | – | 17 பெப்பிரவரி 1977 | 5 மே 1977 | 0 ஆண்டுகள், 77 நாட்கள் | ப. த. ஜாட்டி |
10 | சாரதா முகர்ஜி | – | 5 மே 1977 | 15 ஆகத்து 1978 | 1 ஆண்டு, 102 நாட்கள் | |
11 | கொ. சா. ஆபிரகாம் | – | 15 ஆகத்து 1978 | 15 ஆகத்து 1983 | 5 ஆண்டுகள், 0 நாட்கள் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
12 | தாக்கூர் ராம் லால் | 15 ஆகத்து 1983 | 29 ஆகத்து 1984 | 1 ஆண்டு, 14 நாட்கள் | ஜெயில் சிங் | |
13 | சங்கர் தயாள் சர்மா | 29 ஆகத்து 1984 | 26 நவம்பர் 1985 | 1 ஆண்டு, 89 நாட்கள் | ||
14 | குமுத்பென் மணிசங்கர் ஜோஷி | 26 நவம்பர் 1985 | 7 பெப்பிரவரி 1990 | 4 ஆண்டுகள், 73 நாட்கள் | ||
15 | கிருஷண் காந்த் | 7 பெப்பிரவரி 1990 | 22 ஆகத்து 1997 | 7 ஆண்டுகள், 196 நாட்கள் | இரா. வெங்கட்ராமன் | |
16 | கோபால ராமானுஜம் | – | 22 ஆகத்து 1997 | 24 நவம்பர் 1997 | 0 ஆண்டுகள், 94 நாட்கள் | கொ. இரா. நாராயணன் |
17 | சக்ரவர்த்தி ரங்கராஜன் | 24 நவம்பர் 1997 | 3 சனவரி 2003 | 5 ஆண்டுகள், 40 நாட்கள் | ||
18 | சுர்சித் சிங் பர்னாலா | 3 சனவரி 2003 | 4 நவம்பர் 2004 | 1 ஆண்டு, 306 நாட்கள் | ஆ. ப. ஜை. அப்துல் கலாம் | |
19 | சுசில்குமார் சிண்டே | 4 நவம்பர் 2004 | 29 சனவரி 2006 | 1 ஆண்டு, 86 நாட்கள் | ||
20 | இராமேசுவர் தாக்கூர் | 29 சனவரி 2006 | 22 ஆகத்து 2007 | 1 ஆண்டு, 205 நாட்கள் | ||
21 | நா. த. திவாரி | 22 ஆகத்து 2007 | 27 திசம்பர் 2009 | 2 ஆண்டுகள், 127 நாட்கள் | பிரதிபா பாட்டில் | |
செயல் | ஈ. சீ. இல. நரசிம்மன் | 28 திசம்பர் 2009 | 22 சனவரி 2010 | 9 ஆண்டுகள், 207 நாட்கள் | ||
22 | 23 சனவரி 2010 | 1 சூன் 2014 | ||||
2 சூன் 2014[note 1][i] | 23 சூலை 2019 | பிரணப் முகர்ஜி | ||||
23 | பிசுவபூசண் அரிச்சந்தன் | 24 சூலை 2019 | 23 பெப்ரவரி 2023 | 3 ஆண்டுகள், 214 நாட்கள் | இராம் நாத்து கோவிந்து | |
24 | எசு. அப்துல் நசீர் | 24 பெப்ரவரி 2023 | தற்பொழுது கடமையாற்றுபவர் | 1 ஆண்டு, 297 நாட்கள் | திரௌபதி முர்மு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.