ஆண்ட்ராய்டு 12

From Wikipedia, the free encyclopedia

ஆண்ட்ராய்டு 12 (Android 12) ஆண்ட்ராய்டின் பன்னிரண்டாவது பெரிய வெளியீடும் 19ஆவது பதிப்புமாகும். முதல் பீற்றா பதிப்பு மே 18, 2021 அன்று வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு 12 பொதுமக்களுக்கு ஆண்ட்ராய்டு திறந்த மூல வினைத்திட்டத்தின் வழியாக அக்டோபர் 4, 2021 அன்று வெளியிடப்பட்டது மற்றும் ஆதரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் சாதனங்களுக்கு அக்டோபர் 19, 2021 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

வரலாறு

Thumb
உருவாக்குநர் முன்னோட்டதிற்கும் பீட்டா வெளியீட்டிற்குமான ஆண்ட்ராய்டு 12 குறிவு

ஸ்னோ கோன்[4] என்று உட்புறமாக குறியீட்டுப்பெயரிடப்பட்ட ஆண்ட்ராய்டு 12 ஆனது பெப்ரவரி 18, 2021[5] அன்று இடுகையிடப்பட்ட ஓர் ஆண்ட்ராய்டு வலைப்பூவில் அறிவிக்கப்பட்டதாகும். ஓர் உருவாக்குநர் முன்னோட்டம், பின்வரும் இரு மாதங்களுக்குத் திட்டமிடப்பட்ட இரண்டு கூடுதலைனாவையுடன், உடனடியாக வெளியடப்பட்டது[6][7]. அதன்பிறகு, நான்கு மாந்தாந்திர பீட்டாக்கள் மே மாதத்தில் தொடங்கி, அவற்றுள் கடைசியானது இயங்குதள உறுதிநிலையை ஆகத்து மாதத்தில் எட்டி, பொது கிடைப்புத்தன்மை அதற்கு சற்றுபின் வருமாறு திட்டமிடப்பட்டன.[8]

இரண்டாம் உருவாக்குநர் முன்னோட்டம் மார்ச் 17, 2021[9] அன்று வெளியிடப்பட்டு, மூன்றாம் முன்னோட்டம் ஏப்ரல் 21, 2021[10] அன்று அதைத் தொடர்ந்தது. முதலாம் பீட்டா கட்டமைப்பு மே 18, 2021[1] அன்று வெளியிடப்பட்டது. சூன் 23[11] இல் 2.1க்கு வழுநிவர்த்தி புதுப்பிப்பு பெற்ற பீட்டா 2 ஆனது சூன் 9, 2021[12] அன்று அதைத் தொடர்ந்தது. பின்பு பீட்டா 3 சூலை 14[13], 2021 அன்று வெளியிடப்பட்டது, பீட்டா 3.1க்கு வழுநிவர்த்தி புதுப்பிப்பைச் சூலை 26[14] அன்று இது பெறுகிறது. அசல் சாலை வரைபடத்தில் திட்டமிடப்படாத ஐந்தாம் பீட்டா செப்டம்பர் 8, 2021[15] அன்று வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு திறந்த மூல வினைத்திட்டதில் உறுதிநிலை ஆண்ட்ராய்டு 12 ஆனது அக்டோபர் 4[2] அன்று வெளியிடப்பெற்று அதன் பொது காற்றுவழி வெளியீட்டை, அக்டோபர் 19 அன்று பிக்சல் 6 ஏவுகை நிகழ்ச்சியுடன் உடனிகழ்ந்துப் பெற்றது.[16]

ஆண்ட்ராய்டு 12L

அக்டோபர் 2021 இல் மடிபேசிகள், கைக்கணினிகள், மேசைத்தள அளவிலான திரைகள்[17] மற்றும் குரோம்புக்குகளுக்கானக் குறிப்பிட்ட மேம்பாடுகளையும் பெரிய திரைகளுக்கு பொருத்தமாக்க பயனர் இடைமுகத்திற்கு மாற்றமைவுகளையும் உள்ளடக்கிய ஆண்ட்ராய்டு 12 இன் இடைக்கால வெளியீட்டான ஆண்ட்ராய்டு 12Lஐக் கூகுள் அறிவித்தது.[18][19] இது 2022இன் முற்பகுதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2021 இல் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு 12L இன் முதல் உருவாக்குநர் முன்னோட்டத்தைப் பின்தொடர்ந்து பீட்டா 1 டிசம்பர் 2021 இலும், பீட்டா 2 சனவரி 2022 இலும், பீட்டா 3 பெப்ரவரி 2022 இலும் வெளியிடப்பட்டன.[20] உறுதிநிலை ஆண்ட்ராய்டு 12L ஆனது பெரிய திரைகள் கொண்ட சாதனங்களுக்கு மார்ச் 7, 2022[21] இலும் அதே தேதியில் பிக்சல் திறன்பேசிகளுக்கு "ஆண்ட்ராய்டு 12.1" ஆக வெளியிடப்பட்டது.[22]

அம்சங்கள்

பயனர் இடைமுகம்

அதிகளவிலான அசைவூட்டங்கள், முகப்புத்திரை இடுக்கைகளுக்கான புதிய ஒயில்கள், பெரிய பொத்தான்களென அம்சங்களைக்கொண்டு இயக்க முறைமைக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

திரையுருட்டி திரைப்பிடிப்புகளையெடுக்க ஆண்ட்ராய்டு 12 ஆதரிக்கிறது.

இயங்குதளம்

செயல்திறன் மேம்பாடுகள் பலவற்றை கொண்டுவருகிறது.

தனியுரிமை

தோராயமான இருப்பிடம், துல்லியமான இருப்பிடம் என்று இருப்பிட அனுமதிகளில் இருவகை இருப்பதால் இருப்படவனுமதியைக் கோருஞ்செயலிகளுக்கு அதற்கேற்றவாறு அனுமதியளிக்கவியலும்.

தனியுரிமை முகப்பலகம் என்னும் திரையில் எப்போது எச்செயலி இருப்பிடத்தகவலை அல்லது படக்கருவியை அல்லது ஒலிவாங்கியை அணுகியது என்று அறிந்துகொள்ளவியலும். விரைவமைப்பு மறுநிலைமாற்றிகளில் செயலிளைப் படக்கருவி மற்றும் ஒலிவாங்கியைப் பயன்படுத்துவதிலிருந்துத் தவிர்க்க கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.