பால்ட்டிக் செருமானிய வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
ஆட்டோ சுத்ரூவ (Otto Struve) (ஆகத்து 12, 1897 – ஏப்பிரல் 6, 1963[2]) ஓர் உக்ரேனிய வானியலாளர். உருசிய மொழியில் இவர் ஆத்தோ உலூத்விகோவிச் சுத்ரூவ (Отто Людвигович Струве); என்றாலும் இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கவிலேயே இருந்து பணிபுரிந்தார். இவர் சுத்ரூவ வானியலாளர் குடும்ப வழித்தோன்றல் ஆவார்.; இவர் உலூத்விக் சுத்ரூவவின் மகனாவார்; இவர் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவவின் பேரன் ஆவார்; பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவவின் கொள்ளுப் பேரன் ஆவார். இவர் எர்மேன் சுத்ரூவவின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பு ஆவார்.[1][3][4]
ஆட்டோ சுத்ரூவ | |
---|---|
ஆட்டோ சுத்ரூவ, 1949 அமெரிக்க அஞ்சல் உறையில் | |
பிறப்பு | ஆத்தோ உலூத்விகோவிச் சுத்ரூவ (Отто Людвигович Струве) ஆகத்து 12, 1897 கார்க்கிவ், சுலோபோத உக்ரைன், அன்றைய உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்) |
இறப்பு | ஏப்ரல் 6, 1963 65) பெர்கேலி, அமெரிக்கா. | (அகவை
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | கார்க்கிவ் பல்கலைக்கழகம் |
விருதுகள் | அரசு கழக ஆய்வுறுப்பினர்[1] |
Seamless Wikipedia browsing. On steroids.