From Wikipedia, the free encyclopedia
ஓர் ஒழுங்குடன் ஆடப்படும் செயற்பாடு ஆட்டம் (game) அல்லது விளையாட்டு எனலாம். பொதுவாக மனமகிழ்விற்காக இது ஆடப்பட்டாலும் கல்வி நோக்கம் கொண்டும் ஆட்டங்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. இவ்வகை ஆட்டங்கள் விளையாட்டுப் போட்டிகளினின்றும் வேறுபட்டவை; போட்டிகள் தீவிரமாக நடத்தப்படாமையும் உடற்றிறன் கூடுதலாக வேண்டாமையும் சில காரணிகள். அதேபோல எண்ணங்களின் வெளிப்பாடாக இல்லாமையால் கலையும் அல்ல. இருப்பினும் இந்த வேறுபாடுகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சிலர் ஊதியம் பெற்று விளையாடுவதால் இதனை வேலையாகக் கருதுவோரும் உண்டு.சில ஆட்டங்கள் (காட்டாக, புதிர்கள், கணினி ஆட்டங்கள்) கலைத் திறனோடு வடிவமைக்கப்பட வேண்டி யிருப்பதால் கலை என்ற பகுப்பிலும் கொள்ளலாம்.
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) விளையாட்டு கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
ஓர் ஆட்டத்தின் முக்கிய கூறுகள்: இலக்குகள், விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும். இவை பொதுவாக மனத்திறன் அல்லது உடற்றிறனை தூண்டுவதாக அமையும். நடைமுறைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஓர் உடற் பயிற்சியாகவும், கல்வி கற்றலின் கூறாகவும் உளவியலைத் தூண்டுவதாகவும் அமைகிறது. கூட்டாளிகளின் பங்களிப்பு இல்லாமையால் சாலிடேர், சிக்சா புதிர் போன்ற "ஆட்டங்கள்" ஆட்டவகையில் அல்லாது புதிர்கள் வகைப்பாற்படும் என கிரிசு கிராஃபோர்ட் போன்ற ஆட்ட வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.[1] கி.மு 2600-ஆம் ஆண்டிலிருந்தே,[2][3] மனித நாகரிகத்தின் உலகளாவிய கூறாக ஆட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. அனைத்து பண்பாடுகளிலும் முதன்மை இடம் பெற்றிருந்தன.[4] தமிழ் சங்கப் பாடல்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திலும் பல ஆட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுக்கள் சிறப்பு கருவிகளையும் தனிப்பட்ட ஆடுகளங்களையும் கொண்டு விளையாடுபவர்களைத் தவிர சமூகத்தின் பெரும்பகுதியின் ஈடுபாட்டுடன் ஆடப்படுவதாகும். ஒரு நகரமோ குடியமைப்போ இத்தகைய வசதிகளை செய்து கொடுக்க வேண்டியிருக்கும்.
பரவலான விளையாட்டுகள் பார்வையாளர்களின் மகிழ்ச்சியைத் தூண்டுவதாகவும் அமைகின்றன. தங்களுடைய உள்ளூர் அணியுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு, எதிரணிகளுடன் பகைமை பாராட்டுவதும் உண்டு. இரசிகர்கள் அல்லது விசிறிகள் விளையாட்டுத் துறையில்தான் முதலில் உருவானார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.