From Wikipedia, the free encyclopedia
ஆக்வாட்சு (Hogwarts) எனச் சுருக்கமாக அழைக்கப்படும், ஆக்வாட்சு மந்திரவாத மற்றும் மந்திரவாதிப் பள்ளி (Hogwarts School of Witchcraft and Wizardry) என்பது ஆரி பாட்டர் தொடரில் காணப்படும் பதினொன்று தொடக்கம் பதினெட்டு வரையான வயது எல்லையைக் கொண்ட மாணவர்களுக்கான மந்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் கற்பனைப் பிரித்தானியப் பள்ளியாகும். இதுவே ஜே.கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரின் முதல் ஆறு புத்தகங்களிலும் முக்கிய அமைப்பாக விளங்குகிறது.[3][4]
பிரபஞ்சம் | ஆரி பாட்டர் |
---|---|
வகை | பள்ளி/பாடசாலை |
முதல் தோற்றம் | ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்) |
நிறுவியது | சுமார் 9 ஆம்/10 ஆம் நூற்றாண்டு |
அமைவிடம் | இசுக்கொட்லாந்து |
தலைமையாசிரியர் |
|
நோக்கம் | சிறுவர்களுக்கான மந்திர திறமைகளுக்கான பயிற்சி (இது பிறந்தவுடனே சேர்க்கப்பட்டு பதினொரு வயது நிரம்பிய பின் ஆந்தை மூலம் தகவல் அனுப்பப்பட்டு ஏற்கப்பட்டு உறுதி செய்தவர்களுக்கு மட்டும்.)[1] |
மகுடவாசகம் | இலத்தீன்: Draco dormiens nunquam titillandus ("Never Tickle a Sleeping Dragon"[2]) |
நிறுவியவர்கள் | கொட்ரிக் கிரிபிண்டோர் சலசர் சிலித்தரீன் ரொவெனா ரெவென்கிலொவ் கெல்கா கபிள்பப் |
ரௌலிங் எதேச்சையாகவே இப்பெயரை வைத்தார். ஆரி பாட்டர் தொடரை எழுதுவதற்குச் சில காலம் முன் ரௌலிங் கியு தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அங்கு கண்ட ஆக்வாட் என்ற (Croton capitatus) பயிரின் பெயரை வைத்தே இப்பெயரை வைத்ததாக ரௌலிங் கூறுகிறார்.[5][6] மற்றும் த ஆக்வாட்சு மற்றும் ஆக்வாட் என்ற பெயர்கள் 1954 நிகெல் மொல்ச்வோர்த் கதாபாத்திரத்தை உள்ளடக்கிய ஜோப்ரே வில்லியன்சு எழுதிய ஹவ் டு பி டொப்ப் (How To Be Topp) என்ற நூலில் காணப்படுகிறது.[7][8]
2008 இன் இணைய இணைப்புத் தரவரிசை அடிப்படையில், ஆக்வாட்ஸ் பள்ளி இசுகொட்லாந்து கல்வி நிறுவனங்களில் எடின்பேர்க்கிற்குப் பின்னராக 36 வது சிறந்த பள்ளியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வலையமைப்புத் தரவரிசையின் சுதந்திரப் பள்ளிகளின் பணிப்பாளரின்படி, இது வேடிக்கைக்கான பட்டியலில் இடம்பெற்று வாக்குப் பெறுகிறது.[9]
ஜே.கே. ரௌலிங்கின் எண்ணக்கரு மாதிரியின் அடிப்படையில் ஆக்வாட்சு:[1]
இக்கோட்டை பல கோபுரங்கள் மற்றும் கொத்தளங்களை கொண்டு பிரமாண்டமாகவும், பயங்கரமாக காணப்படும். இது வீசுளியின் வீட்டைப் போல் காணப்படும். மகிள்சால் இப்படிப்பட்ட கோட்டையை கட்ட முடியாது. ஏனென்றால், இக்கோட்டை மந்திரத்தால் கட்டப்பட்டதாகும்.
நாவல்களின் அடிப்படையில், ஆக்வாட்சு இசுக்கொட்லாந்தின் ஏதோவொரு பகுதியில் ஆக்வாட்சு அமைந்துள்ளது.[10][11] (டப்டவுனிற்கு அருகாமையில் அமைந்துள்ளது என ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படம் கூறுகிறது.) இந்தப்பள்ளி பல மந்திரங்களையும், தந்திரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மற்றும் மகிள்சால் (மகிள் என்பது மந்திரம் தெரியாத சாதாரண மனிதர்கள்) சரியாக இதன் அமைவிடத்தைக் காட்டுவது சாத்தியமற்றது. மகிள்சால் இந்தப்பள்ளியைப் பார்க்க முடியாது. மாறாக, சிதைவுகள் மற்றும் பல அபாய எச்சரிக்கைகள் மட்டும் தெரியும்.[GF Ch.11] இப்பள்ளியின் கோட்டை சாய்வான புல்வெளி, பூந்தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், ஒரு ஏரி (கருப்பு ஏரி என அழைக்கப்படும்.), ஒரு பெரிய அடர்ந்த காடு, (தடைசெய்யப்பட்ட காடு எனப்படுகிறது.), பல பசுமைக்குடில்கள், பல கட்டிடங்கள் மற்றும் ஒரு முழு அளவு குவிட்டிச்சு மைதானத்தையும் கொண்டுள்ளது. இங்கு பள்ளியில் இருக்கும் ஆந்தைகளையும், மாணவர்களின் ஆண்தைகளையும் வளர்ப்பதற்கு ஆண்தைகளுக்கான வசிப்பிடமும் காணப்படுகிறது. ஆக்வாட்சில் காணப்படும் அறைகளும், படிக்கட்டுகளும் சில வேளைகளில் நகரக்கூடியவை ஆகும். இப்பள்ளியில் மிகவும் பெரிய படிக்கட்டுக்களே காணப்படுகின்றன.[12] மின்சாரமோ மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்களோ ஆக்வாட்சில் காணப்படுவது இல்லை. ஆக்வாட்சில் வானொலிகள் உபயோகப்படுத்துவதுண்டு. ஆனால் மின்சாரம் இல்லாமல் மந்திரத்தால் மட்டுமே.
ஆக்வாட்சு ஏரிக்கரையிலே அமைந்துள்ளது. இந்த ஏரி கருப்புநீரேரி என அழைக்கப்படுகிறது. மேர்மனிதர், கிரின்டிலோவ் மற்றும் பெரிய கடற்கணை போன்ற ஜீவராசிகள் இந்தக் கருப்பு நீரேரியில் வசிக்கின்றன. பெரிய கடற்கனைகள், மனிதர்களைத் தாக்குவது இல்லை. சிலவேளைகளில் மாணவர்கள் ஏரியில் இருக்கும் பொழுது உயிர் காப்பாளனாக விளங்குகிறது.
ஆக்வாட்சு பதினொன்று தொடக்கம் பதினெட்டு வரையான வயது எல்லைக்குள்ளான மாணவர்களுக்கான கலவன் இரண்டாம் நிலை உரைவிடப்பல்லியாகும்.[4] ஆக்வாட்சில் கல்வி கட்டாயமல்ல. ஏழாவது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் வீடில் இருந்தே கல்வி பயிலலாம். ரௌலிங் தொடக்கத்தில் ஆக்வாட்சில் ஓராயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்று கூறினார்.[13]
நாவல்களின் அடிப்படையில், ஆக்வாட்சில் அனுமதி மந்திரவாதத் திறமை இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் தானாகவே வழங்கப்படும்.[14] மற்றும் இசுகுயிப்சுகள் (மந்திரவாதிகளுக்கு பிறந்த மந்திரத் திறமை அற்றோர்) மாணவர்களாக (ஆனால் அவர்களால் ஆர்கசு பிலிட்சு போல் அங்கு வேலை செய்யமுடியும்.) பாடசாலைக்கு வருகை தரமுடியாது.[15] ஆக்வார்ட்சில் உள்ள ஒரு மந்திர இறகு மந்திரவாதிப் பிள்ளைகளின் பிறப்பை அறிந்து அதனை ஒரு பெரிய காகிதத்தோல் புத்தகத்தில் எழுதும்.[16] ஆனால் இங்கு அனுமதி சோதனை நடைபெறுவதில்லை. ஏனென்றால், "நீங்கள் மந்திரவாதி அல்லது மந்திரவாதி இல்லை".[14] ஒவ்வொரு வருடமும் ஒரு ஆசிரியர் காகிதத் தோல் புத்தகத்தினை சோதனை செய்து பதினோரு வயது வந்த மாணவர்களுக்கு கடிதம் அனுப்புவார். ஏற்றுக்கொள்ளுதல் அல்லது மறுத்தல் தகவல்களை 31 சூலைக்கு முன்னர் ஆக்வாட்சிற்கு அனுப்பவேண்டும். இந்தக் கடிதம் மந்திரப் புத்தகங்கள், சீருடை போன்ற மாணவர்கள் கொண்டுவரவேண்டியவைகளின் பட்டியலையும் கொண்டிருக்கும். அதிகமான மாணவர்கள் தேவையான அனைத்து பொருட்களையும் த லீக்கி கால்ட்ரோநில் அமைந்துள்ள் விசார்டிங் பப் கடைக்கு பின்னால் சாரிங் குரொஸ் வீதிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு மறைந்த தெருவான டையாகன் வீதியில் அமைந்துள்ள கடைகளிலேயே வாங்க நினைப்பார்கள். இவ்வாறான பொருட்களை கொண்டுவர முடியாத மாணவர்களிற்கு ஆக்வார்ட்சு டொம் ரிடில் என்ற அநாதைக்கு செய்தது போல் நிதி உதவிகளை வழங்கும்.
மந்திர உலகம் பற்றியும், தங்களுடைய மந்திர சக்திகள் பற்றியும் சற்றும் தெரிந்திராத மகிள்களுக்கு பிறந்த மந்திரவாதிகளுக்கு கடிதத்துடன், மந்திரவாத உலகம் பற்றி பெற்றோருக்கோ அல்லது பாதுகாவலருக்கோ அறியத் தரும் வகையில் ஒரு ஆக்வாட்சு பணியாற்றுனரும் அனுப்பப்படுவர். அப்பணியாற்றுனர் அந்தக் குடும்பத்தினருக்கு தயாகன் வீதியில் பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்வர்.
ஒவ்வொரு மாணவரும் பூனை, தேரை, எலி அல்லது ஆந்தை இவற்றில் ஒன்றை கொண்டு வர அனுமதிக்கப்படுவர். முதலாவது வருட மாணவர்கள் ஒரு மந்திரக்கோல், பாடப்புத்தகம், ஒரு தொலைநோக்கி (வானியலுக்காக) உள்ளிட்ட சில பொருட்களை கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களது சீருடையில் தங்களது பெயர் பதித்த பெயர்தொடுப்பை அணிய வேண்டும். முதலாவது வருட மாணவர்கள் தங்களுக்கென ஒரு மந்திரத் துடைப்பம் வைத்திருக்க அனுமதி இல்லை. ஆனால் ஆரியின் முதலாவது வருடத்தில் தனது அருமையான திறமையை சீக்கராக குவிட்டிச்சு போட்டியில் காட்டிய பின் இந்த விதி நீக்கப்பட்டது.
ஆக்வாட்சிற்கு அனைத்து வருட மாணவர்களும் வருகை தருவதற்கான முதன்மை வழி ஆக்வாட்சு எக்சுபிரெச்சு எனும் தொடரூந்து ஆகும். மாணவர்கள் லண்டனில் அமைந்துள்ள கிங்க்'ஸ் குரோச்சு தொடரூந்து நிலையத்தின் 9ம் தளத்திற்கு 10ம் தளத்திற்கும் இடையில் உள்ள ஒரு சுவரின் உள்ளாக செல்லும் பொது வரும் கற்பனையால் அமைந்த 9¾ தளத்தில் வரும் தொடரூந்தான ஆக்வாட்சு எக்சுபிரெச்சு தொடரூந்தில் ஏறி ஹொக்ஸ்மெட் தொடரூந்து நிலையத்தில் இறங்கி ஆக்வாட்சு பள்ளிக்கு செல்வர். ஹொக்ஸ்மெட் தொடரூந்து நிலையம் ஆக்வாட்சு பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது. ஆக்வாட்சு எக்சுபிரெச்சு சில நேரங்களில் பொழுது சாய்ந்த பின்னரே வந்து சேரும்.
ஹொக்ஸ்மெட் தொடரூந்து நிலையத்திலிருந்து, முதலாம் வருட மாணவர்கள் அனைவரும் சேர்ந்து "ஆக்வாட்சின் திறப்புக்கள், விளையாட்டு மற்றும் மைதான பாதுகாவலரால்" (முதலாவது புத்தகத்தில் ஹாக்ரிட்டு இருந்தார்.) மந்திரத்தால் இயங்கி ஏரியை கடந்து ஆக்வாட்சின் நுழைவாயிலின் அருகில் இறக்கும் சிறிய படகுகளில் ஏறி ஆக்வாட்சிற்கு வருவர். பழைய மாணவர்கள் தேசுரல்கள் எனும் ஒரு வகை கற்பனை உயிரினத்தின் மூலம் இழுக்கப்படும் வண்டிகள் மூலம் ஆக்வாட்சின் நுழைவாயிலை அடைவர். முதலாம் வருட மாணவர்கள் கோட்டைக்கு வந்தவுடன் பழைய மாணவர்கள் அனைவரும் உட்காரும் வரையில் ஒரு அறையில் காத்திருப்பார். பின்னர் முதலாம் வருட மாணவர்கள் தங்களது இல்லங்களை தெரிவு செய்யும் விழாவிற்காக கிரேட் ஹோல் எனப்படும் மண்டபத்திற்கு செல்வர். ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் புத்தகத்தில் "இல்லங்களை தெரிவு செய்வது ஒரு முக்கியமான விழா, ஏனென்றால் நீங்கள் தங்கும் பொழுது ஆக்வாட்சில் உங்கள் இல்லங்கள் தான் உங்கள் குடும்பம். நீங்கள் உங்களது இல்ல மாணவர்களுடனேயே வகுப்புக்களில் பாடங்கள் படிப்பீர்கள். உங்கள் இல்ல தங்குமிடங்களில் நித்திரை கொள்ளலாம், பொது அறையில் உங்களது ஓய்வு நேரத்தை கழிக்கலாம்." என மினெர்வா மகானெகல் ஆசிரியர் கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லங்களை தெரிவு செய்யும் தொப்பி ஒரு பாட்டு பாடும். அது பாடி முடித்ததும், மற்ற மாணவர்களுக்கு முன்பாக இருக்கும் ஒரு கதிரையில் முதலாம் வருட மாணவர்கள் அமர்வார்கள். அந்தத் தொப்பியை மாணவர்களின் தலையில் அணியும் போது, அந்தத் தொப்பி அவனதோ அவளதோ உள்ளத்தை ஆராய்ந்து மாணவர்களின் திறைமைகள், குணாதிசயம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நான்கு இல்லங்களில் ஒன்றை தெரிவு செய்யும். இல்லங்களை தெரிவு செய்யும் விழாவிற்கு அடுத்ததாக மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரு மிகப்பெரிய விருந்தில் கலந்து கொள்வர். டம்பிள்டோர் மகிழ்ச்சியாக காணப்படும் போது, அவரே பாடசாலை கீதத்தை பாடும் மாணவர்களுக்கு தலைமை தாங்கி பாடுவார்.[17]
ஆக்வாட்சு நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இல்லமும் ஆக்வாட்சை நிறுவிய நால்வரினது கடைசி பெயர்களைக் கொண்டுள்ளது. கொட்ரிக் கிரிபிண்டோரின் கடைசி பெயரைக் கொண்டு கிறிபிண்டோர் இல்லமும், சலசர் சிலித்தரீனின் கடைசி பெயரைக் கொண்டு சிலித்தரீன் இல்லமும், ரொவெனா ரெவென்கிலொவ்வின் கடைசி பெயரைக் கொண்டு ரெவென்கிலொவ் இல்லமும், கெல்கா கபிள்பப்பின் கடைசி பெயரைக் கொண்டு கபிள்பப் இல்லமும் உருவாக்கப்பட்டது. அனைத்து இல்லங்களும் முழு வருடமும் இல்லக்கோப்பைக்காக போட்டியிடும். ஒவ்வொரு மாணவரின் நடத்தைக்கும் புள்ளிகள் கூடும் மற்றும் குறையும். (உதாரணமாக, வகுப்பில் ஒரு கேள்விக்கு சரியாக பதில் அளித்தால் ஐந்து அல்லது பத்து புள்ளிகள் வழங்கப்படும். வகுப்பிற்கு பிந்தி வந்தால் பத்து புள்ளிகள் கழிக்கப்படும். குவிட்டிச்சு கோப்பையை வெல்வதற்காக ஒவ்வொரு இல்லமும் தனது சொந்த குவிட்டிச்சு குழுவைக் கொண்டுள்ளது. இந்த இரு போட்டிகளும் இல்லங்களுக்கு இடையிலான பகைமையை வளர்த்தெடுக்கின்றன. ஆக்வாட்சில் இல்லங்கள் தான் மாணவர்களின் குடும்பம். ஒவ்வொரு இல்லமும் ஒவ்வொரு ஆக்வாட்சு ஆசிரியர்களின் கீழ் காணப்படுகின்றன. மாணவர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கல், கடுமையான தண்டனைகள் தொடர்பில் கலந்துரையாடல், அவசர காலங்களில் இல்லங்களுக்கு பொறுப்பாக இருத்தல் போன்ற செயல்களில் இப்பொறுப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு இல்லங்களிற்கும் ஒரு பொது அறை காணப்படும்.
ஆக்வாட்சின் முன்னைய காலத்தில், ஆக்வாட்சின் நான்கு நிறுவுனர்களாலுமே தாங்களாகவே இல்லங்களைத் தெரிவு செய்தனர். இவர்கள் தாங்கள் இறந்த பின் எவ்வாறு மாணவர்களின் இல்லங்களை தெரிவு செய்வார்கள் எனக் கவலைப்பட்டனர். ஆதலால், கொட்ரிக் கிறிபிண்டோர் தனது தொப்பியை கழற்றினார் அதில் நிறுவுனர் நால்வரும் சேர்ந்து மாணவர்களின் திறமைகள் அடிப்படையில் மாணவர்களுக்கு சரியான இல்லங்களை தெரிவு செய்யக்கூடிய அடிப்படையில் அந்தத் தொப்பிக்கு அறிவைக் கொடுத்தனர். மாணவர்களின் சொந்த தெரிவு இதனை பாதிக்கும். உதாரணமாக அத்தொப்பி ஆரியை முதலில் சிலித்தரீன் இல்லத்திற்குத் தான் தெரிவு செய்தது ஆனால் ஆரி சிளிதரீன் வேண்டாம் என்றதால் கிறிபிண்டோர் இல்லத்தில் சேர்த்தது.
ஒவ்வொரு இல்லத்திற்கும் ஒவ்வொரு சொந்த ஆவி காணப்படும். ரௌலிங் ஒவ்வொரு இல்லத்தையும் ஒவ்வொரு தனிமமாக ஒத்துள்ளது என வகைப்படுத்துகிறார். மற்றும் ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி இரத்தினக்கற்களும் காணப்படுகின்றன.
கிறிபிண்டோர் தைரியம், துணிவு, உணர்ச்சி, மற்றும் தீரச்செயல் போன்ற சிறப்புக்களை கொண்டுள்ளது. இந்த இல்லத்தின் சின்னம் சிங்கம் ஆகும். மற்றும் இவ்வில்லத்தின் நிறங்கள் கருஞ்சிவப்பு மற்றும் தங்க நிறம் என்பன ஆகும். கிறிபிண்டோர் இல்லத்தின் பொறுப்பாசிரியர் மாற்றுருவ பாட ஆசிரியர் மற்றும் ஆக்வாட்சின் பிரதி தலைமையாசிரியையான மினெர்வா மகானெகல் ஆவார். இந்த இல்லத்தின் ஆவி தலையில்லா நிக் என பொதுவாக அழைக்கப்படும் சேர் நிக்கலஸ் டி மிம்சி-போர்பிங்டன் ஆகும். ரௌலிங்கின் அடிப்படையில், கிறிபிண்டோர் சுமாராக நெருப்புத் தனிமத்தை ஒத்துள்ளது. இந்த இல்லத்தின் நிறுவுனர் கொட்ரிக் கிறிபிண்டோர் ஆவார். கொட்ரிக் கிரிபிண்டோரின் விசேட பொருளின் சிறப்பு என்னவென்றால் நான்கு நிறுவுனர்களின் விசேட பொருட்களிலும், இது மட்டுமே ஹோகிரக்சு இல்லை. கொட்ரிக் கிறிபிண்டோர் விசேட பொருள் ரூபி இரத்தினக்கல் பதித்த வாழ் ஆகும். இந்த வாள் உண்மையான தேவையுடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஹோகிரக்சுவை அளிக்கக்கூடிய சில பொருட்களில் இந்த வாளும் ஒன்றாகும். இந்த இல்லத்தின் இரத்தினக்கல் ரூபி ஆகும்.
கிரிபிண்டோரின் பொது அறை கோட்டையின் உயரமான கோபுரங்களில் ஒன்றாகும். இதன் நுழைவாயில் ஏழாவது மாடியின் கிழக்கு பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்த, பொதுவாக தனது நண்பியான வயலெட்டை சந்திக்கும் ஒரு பருமனான பெண்ணின் ஓவியத்தால் பாதுகாக்கப்படுகிறது. வயலெட் ஆறாவது மாடியில் இருக்கிறார். எனினும், சில வேளைகளில் வயலெட்டே வந்து சந்திப்பார். அவள் சரியான கடவுச் சொல்லை கூறினால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்பாள். சீரியஸ் பிளாக் கோபுரத்திற்குள் நுழைய முயற்சி செய்த போது பிழையான கடவுச் சொல்லை கூறியதால் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என மூன்றாவது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெவில் லாங்பாட்டம் கடவுச்சொல்லை மறந்ததால் மற்ற கிரிப்பிண்டோர் மாணவர்கள் வரும் வரையில் பொறுத்திருந்தான் என முதலாவது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[18]
கபிள்பப் கடின உழைப்பு, பொறுமை, நீதி, மற்றும் விசுவாசம் போன்ற சிறப்புக்களை கொண்டுள்ளது. இவ்வில்லத்தின் சின்னம் பட்ஜர் ஆகும். மற்றும் நிறங்கள் கேனரி மஞ்சள் மற்றும் கருப்பு ஆகும். கபிள்பப் இல்லத்தின் பொறுப்பாசிரியர் மூலிகை மருத்துவ ஆசிரியர் பொமோனா இசுபிரவுட் ஆவார். இவ்வில்லத்தின் ஆவி த பட் பிரிரயர் ஆகும். ரௌலிங்கின் அடிப்படையில், கபிள்பப் சுமாராக நில தனிமத்தை ஒத்துள்ளது. இந்த இல்லத்தின் நிறுவுனர் கெல்கா கபிள்பப் ஆவார். கெல்கா கபிள்பப்பின் விசேட பொருள் ஒரு ஹோகிரக்சு ஆகும். கெல்கா கபிள்பப் விசேட பொருள் ஒரு கோப்பை ஆகும். இந்த இல்லத்தின் இரத்தினக்கல் டொபாசு ஆகும்.
ரெவென்கிலோவ் நுண்ணறிவு, படைப்பாற்றல், கற்றல், மற்றும் அறிவு போன்ற சிறப்புக்களை கொண்டுள்ளது.[HP5][HP7] இந்த இல்லத்தின் சின்னம் கழுகு, மற்றும் இல்ல நிறங்கள் நீலம் மற்றும் வேன்கள் நிறம் ஆகும். இந்த இல்லத்தின் பொறுப்பாசிரியர் பிள்ளியசு பிலிட்விக் ஆவார். ரெவென்கிலோவ் இல்லத்தின் ஆவி த கிரேய் லேடி எனப்படும் கெலெனா ரெவென்கிலோவ் ஆகும். ரௌலிங்கின் அடிப்படையில், ரெவென்கிலோவ் சுமாராக வளித் தனிமத்தை ஒத்துள்ளது. இந்த இல்லத்தின் நிறுவுனர் ரொவெனா ரெவென்கிலோவ் ஆவார். ரோவேனா ரேவேன்கிலோவின் விசேட பொருள் ஹோகிரக்சுகலீல் ஒன்றான பரிவட்டம் (diadem) ஆகும். இது ரோவேனா ரேவேன்கிலோவிடம் இருந்து அவரது மகளான கெலனா ரெவென்கிலோவ் தனது தாயை விட்டு பிரிந்து செல்லும் போது திருடியிருந்தார். இதன் இல்ல இரத்தினக்கல் சப்பயர் ஆகும்.
ரெவென்கிலோவ்வின் தங்குமிடங்கள் ஆக்வாட்சின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரெவென்கிலோவ் கோபுரத்தில் அமைந்துள்ளது.
சிலித்தரீன் இலட்சியம், தந்திரம், தலைமைத்துவம், மற்றும் வளம் ஆகிய சிறப்புக்களை கொண்டுள்ளது. ஆரி பாட்டர் அண்டு தா பிலோசபர்சு இசுடோன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படையில், மந்திரத்தொப்பி "சிலிதரீன்ஸ் தங்களின் வழியைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்" என்று கூறுகிறது. சிலித்தரீன் இல்லத்தின் சின்னம் பாம்பு , நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளி ஆகும். சலசர் சிலித்தரீன் இவ்வில்லத்தை நிறுவினார். இந்த இல்லத்தின் பொறுப்பாசிரியர் ஆறாவது புத்தகம் வரை செவரசு சிநேப் ஆவார். பின்னர், முன்னாள் பொறுப்பாசிரியராக இருந்து ஓய்வு பெற்று பின்னர் ஆசிரியராக சேர்ந்த ஹோரசு சிலகோர்ன் ஆவார். சிலித்தரீன் இல்லத்தின் ஆவி த பிளடி பரோன் ஆகும்.[19] ரௌலிங்கின் அடிப்படையில், சிலித்தரீன் சுமாராக நீர் தனிமத்தை ஒத்துள்ளது. சிலித்தரீனின் தங்குமிட அறைகளையும் பொது அறையும் நிலவறைகளில் உள்ள ஒரு வேற்று கற்சுவரை தாண்டிய பின் அடையலாம். சிலித்தரீன் பொது அறை நீளமாக உயரம் குறைவாக ஆக்வாட்சு ஏரியின் கீழ் அமைந்துள்ளது. இந்த அறை பச்சை விளக்குகள் மற்றும் செதுக்கப்பட்ட சாய்வு நாற்காலிகள் போன்ற பொருட்களை கொண்டிருக்கும்.
சலசர் சிலித்தரீனின் விசேட பொருள் ஹோர்கிரக்சுகளில் ஒன்றான டொப்பாசு பதித்த ஒரு தாயத்து ஆகும். இந்தத் தாயத்தில் எஸ் ("S") என்ற ஆங்கில எழுத்து பாதிக்கப்பட்டிருக்கும். சிலித்தரீனின் இல்ல இரத்தினக்கல் எமெரால்ட் ஆகும்.
மந்திரப் பள்ளி என்ற வகையில், வழமையான பாடசாலைளில் கற்பிற்பதைப் போல் அல்லாமல் ஆக்வாட்சில் கற்பிக்கப்படும் பாடங்கள் வேறுபடுகின்றன. மத்திரத்தின் வரலாறு, மந்திரவாதி அல்லாதோர் அல்லது மகிள் பாடம், மந்திரச்சொற்கள் போன்ற சில பாடங்கள் மந்திரவாத உலகத்திற்கென்றே தனித்துவமாக விளங்குகின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாடங்கள் என்ற வகையில் ஆக்வாட்சில் பன்னிரண்டு ஆசிரியர்கள் (பேராசிரியர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்) கல்வி கற்பிக்கின்றனர். அனைத்து பேராசிரியர்களும் பாடசாலையின் தலைமையாசிரியராலோ, அல்லது பிரதி தலைமையாசிரியராலோ மேற்பார்வை செய்யப்படுவார்கள். மாற்றுருவம், தீய சக்திக்கு எதிரான கலைகள், மந்திரச் சொற்கள், மந்திரப் பானம் தயாரிப்பு, வானியல், மத்திரத்தின் வரலாறு, மற்றும் மூலிகை மருத்துவம் போன்ற பாடங்கள் முதல் ஐந்து வருட மாணவர்களுக்கும் கட்டாய பாடமாகும். பறத்தல் பாடமும் முதல் ஐந்து ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயமாகும். இரண்டாவது வருடத்தின் ஆண்டிறுதியில், ஒவ்வொரு மாணவரும் மூன்றாவது வருடம் தொடங்குவதற்காக குறைந்தது இரண்டு பாடமாவது தெரிவு செய்ய வேண்டும். இதற்காக ஐந்து பாடங்கள் தரப்படும். அவையாவன எண்ணிக்கையைக் கொண்டு குறிசொல்லல், மகிள் பாடம், எதிர்காலத்தைக் கணித்தல், பண்டைய ரூன்ஸ் பாடம் மற்றும் மந்திர உயிரினங்கள் என்பன ஆகும். இரசவாதம் போன்ற மிகவும் விசேடமான பாடங்கள் போதுமான தேவை இல்லையெனில் கடைசி இரண்டு வருட மாணவர்களுக்கு தெரிவிற்கு சில நேரங்களில் வழங்கப்படும்.[20]
ஆக்வாட்சில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் அவர்கள் கற்பிக்கும் பாடங்களும்:
ஆசிரியர் | பாடம் | குறிப்பு |
---|---|---|
குத்பேர்ட் பின்சு | மந்திரத்தின் வரலாறு | அனைத்து தொடரிலும் மத்திரத்தின் வரலாறு பாடத்தின் ஆசிரியராக விளங்குகிறார். |
சாரிட்டி பேர்பேஜ் | மகிள் பாடம் | முதல் ஆறு தொடர்களில் மகிள் பாட ஆசிரியராக பணியாற்றுகிறார். பின்னர் ஏழாவது தொடரில் வொல்டெமொர்ட்டினால் கொல்லப்படுகிறார். |
அலெக்டோ மற்றும் ஏமிகசு கரோவ் | மகிள் பாடம்/ தீய சக்திக்கு எதிரான கலை | இரு கரோவ்களும் பிணந்தின்னிகள் ஆவர். |
அல்பசு டம்பிள்டோர் | மாற்றுருவம் | டொம் ரிடிலின் காலத்தில் மாற்றுருவ ஆசிரியராகவும், கிறிபின்டோரின் போருபாசிரியராகவும் விளங்கியவர். |
பியரென்சு | குறி சொல்லல் | |
பில்லியசு பிலிட்டுவிக் | மந்திர சொற்கள் | அனைத்து தொடரிலும் மத்திர சொற்கள் பாடத்தின் ஆசிரியராக விளங்குகிறார். |
ரூபியசு ஹாக்ரிட்டு | மந்திர உயிரினங்கள் | மூன்றாவது தொடரிலிருந்து மந்திர உயிரினங்கள் பற்றிய பாடத்தை கற்பிக்கிறார். |
ரொலாண்டா ஹூச் | பறத்தல் | அனைத்து வருடங்களிலும் பறத்தல் பாடம் கற்பிக்கிறார். |
சில்வனசு கேட்டில்பேர்ன் | மந்திர உயிரினங்கள் | |
கில்டெரோய் லொக்கார்ட்டு | தீய சக்திகளுக்கு எதிரான கலை | இரண்டாவது தொடரில் மட்டும் தீய சக்திகளுக்கு எதிரான கலை பாடத்தைக் கற்பிக்கிறார். இரண்டாவது தொடரில் மந்திரத்தால் தன நினைவுகளை இழக்கிறார். |
ரீமசு லுப்பின் | தீய சக்திகளுக்கு எதிரான கலை | மூன்றாவது தொடரில் மட்டும் தீய சக்திகளுக்கு எதிரான கலை பாடத்தைக் கற்பிக்கிறார். தான் ஒரு மனித ஓநாய் என்பது மாணவர்களுக்கு தெரிந்து விடுவதால் பணியில் இருந்து இடை விலகுகிறார். |
மினெர்வா மகானெகல் | மாற்றுருவம் | அனைத்து தொடரிலும் மாற்றுருவ ஆசிரியராக கடமையாற்றுகிறார். |
அலாசுடெர் மூடி | தீய சக்திகளுக்கு எதிரான கலை | நான்காவது தொடரில் மட்டும் தீய சக்திகளுக்கு எதிரான கலை பாடத்தைக் கற்பிக்கிறார். பார்டி குரவுச் ஜூனியர் தான் பொலிஜூஸ் மந்திர பானத்தின் (வேறொருவராக மாற பயன்படுத்தும் பானம்) மூலம் அலாசுடர் மூடியின் உருவத்திற்கு மாறி கற்பிற்கிறார். |
குயிரினசு குரெல் | தீய சக்திகளுக்கு எதிரான கலை | முதலாவது தொடரில் மட்டும் தீய சக்திகளுக்கு எதிரான கலை பாடத்தைக் கற்பிக்கிறார். பிலாசபர்சு இசுடோனின் பாதுகாவல் அறையில் நடந்த ஆரியுடன் நடந்த சண்டையில் இறக்கிறார். |
அரோரா சினிசுட்ரா | வானியல் | அனைத்து வருடங்களிலும் வானியல் பாடம் கற்பிக்கிறார். |
ஹோரசு சிலக்கோர்ன் | மந்திர பானம் தயாரிப்பு | ஆரி பிறப்பதற்கு முன்னர் சிலித்தரீன் இல்லத்தின் பொறுப்பாசிரியராக இருந்து இடை விலகினார். பின்னர் ஆறாவது தொடரில் அல்பசு டம்பில்டோரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடம் கற்பிற்கிறார். |
செவெரசு சிநேப் | மந்திர பானம் தயாரிப்பு / தீய சக்திகளுக்கு எதிரான கலை | ஆறாவது தொடர் வரையில் மந்திர பானம் தயாரிப்பு பாடம் கற்பிற்கிறார். பின்னர் தீய சக்திகளுக்கு எதிரான கலை பாடத்தைக் கற்பிக்கிறார். |
போமோனா இசுபிரவுட் | மூலிகை மருத்துவம் | அனைத்து தொடரிலும் மூலிகை மருத்துவ பாடம் கற்பிற்கிறார். |
சிபில் டிரெலவ்னே | குறி சொல்லல் | 1980 ஆம் ஆண்டு தொடக்கம் ஆர்டர் ஆப் த பீனிக்சுவில் டொலெரசு அம்பிரிட்ஜ் வெளியேற்றும் வரையில் குறி சொல்லல் பாடம் கற்பிற்கிறார். |
டொலெரசு அம்பிரிட்ஜ் | தீய சக்திகளுக்கு எதிரான கலை | ஐந்தாவது தொடரில் மட்டும் தீய சக்திகளுக்கு எதிரான கலை பாடத்தைக் கற்பிக்கிறார். இவர் மந்திர மாஜாயால அமைச்சரவையில் கடமையாற்றியவர் ஆவார். |
செப்டிமா வெக்டர் | எண்ணிக்கையை கொண்டு எதிர்காலத்தை கணித்தல். | முழு தொடரிலும் எண்ணிக்கையை கொண்டு எதிர்காலத்தை கணித்தல் பாடத்தை கற்பிற்கிறார். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.