ஆக்சுபோர்டு மின்மணி (Oxford Electric Bell) என்பது 1840 ல் உருவாக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஆய்வுக்கூட மின்சார மணி ஆகும். திருச்சபைச் சமயகுருவும் இயற்பியலாளரும் ஆன ராபர்ட் வாக்கர் (Robert Walker) முதன்முதலில் வாங்கிய உபகரணம் ஆகும்.[1][2] இங்கிலாந்து நாட்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள கிளாரென்டன் ஆய்வகத்தில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Thumb
ஆக்சுபோர்டு மின்மணி
Thumb
இரண்டு அடுக்குகளால் மின்னூட்டம் பெறும் மணியின் நா (clapper), இரு மணிகளுக்கிடையே முன்னும் பின்னும் நகர்கிறது.

வடிவமைப்பு

இந்தக் கருவி இரு பித்தளை மணிகளால் ஆனது, ஒவ்வொன்றும் ஒரு வோல்ட்டா அடுக்குக்குக் கீழே வெக்கப்பட்டுள்ளது (இது ஒரு வகை மின்கலம் ஆகும்). இரண்டு அடுக்குகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். 4 மிமீ விட்ட அளவுள்ள ஒரு உலோகக் கோளமே மணியின் நா (clapper), இரு இரு அடுக்குகளுக்குமிடையே இணைக்கப்பட்டுள்ளது. இது நிலைமின்னியல் விசை மூலம் மணியை ஒலிக்கச் செய்கிறது. மணியின் நா, ஒரு மணியை தொடும் போது நிலைமின்னாற்றலால் அதே மின்னூட்டம் பெறுகிறது. அதனால் அருகிலுள்ள மற்றொரு மணியால் கவரப்பட்டு ஒலியை எழுப்புகிறது. இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த இயக்கத்தை உருவாக்க அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கலங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன்பின் குறைந்த மின்னழுத்தத்திலேயே, மணிகள் மின்னூட்டம் பெறுகிறது. இந்த காரணத்தால் அவைத் தொடர்ந்து செயல்படுகிறது. இவை 2 ஏர்ட்சு அதிர்வெண் கொண்ட அலைவுகளை உருவாக்குகிறது.[3]

இதில் பயன்படுத்தப்படும் உலர் மின் அடுக்குகள், எதனால் ஆனவை என்பது தொியவில்லை. ஆனால் அதன் மீது மின்காப்பானாக கந்தகம் பூசப்பட்டுள்ளது.[2] மின்வேதியியல் மற்றும் நிலைமின்னியல் தத்துவத்தில் செயல்படுகிறது.[4] ஆக்சுபோர்டு மின்மணி இடையறா இயக்கத்தை விளக்கப் பயன்படுத்துவதில்லை. உலா் அடுக்குகள் மின்னூட்டத்தை இழந்தவுடனே, மணி ஒலி எழுப்புவதை நிறுத்திவிடுகிறது.[5][6]

1840 ல் தொடங்கி இன்று வரை 10 பில்லியன் ஒலிகளை எழுப்பியுள்ளதாக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[2]

இயங்கும் விதம்

1840 முதல் அதிக ஈரப்பதம் உள்ள போது சிறுசிறு தடைகள் ஏற்படுவதைத் தவிர, மற்றபடி மணி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.[7] இந்த மணியானது 1825 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.[2]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.